பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/595

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாரானைப் பருவம் 513 களால் தெளியலாம். தாம் அம்மையப்பர் கொடுத்த பாலை யுண்டதை அவரே. போதையார் பொற்கிண்ணத்து அடிசில் பொல்லா தெனத் தாதையார் முனிவுறத் தான் என ஆண்டவன் காதையார் குழவினன் கமுமல வளநகர்ப் பேதையாள் அவளொடு பெருந்தகை இருந்ததே என்று பாடியுள்ளார். 'வாசி தீரவே காசு நல்குவீர்” என்று குழந்தை கேட்டது போலக் காசு கேட்டதனுலும், அத்தர் பியல்மீது (தோள் மீது) இருந்துதாம் பாடினர் என்பதை அவரே "அத்தர்பியல் மேல் இருந்து இன் இசையால் உரைத்தபனுவல்' என்று பாடியிருப்பதாலும், இவர் குழந்தை நிலையில் இருந்து சத்புத்திர மார்க்கத்தை விளக்கிப் பேறுபெற்றனர் என்பதைத் தெளியலாம். சுந்தரர் சகமார்க்கமாம் தோழமை மார்க்கத்தை விளக்க வந்தவர் என்பதை அவர் வாக்கைக் கொண்டே நிறுவலாம். ஆரூரர், திருவாரூர் இறைவனைப்பற்றிக் குறிப் பிடுகையில், 'ஏழிசையாய் இசைப்பயனுய் இன்னமுதாய் என்னுடைய தோழனுமாய்' என்று பாடிக் குறிப்பிட்டுள்ளனர். இறைவர் சுந்தரரைத் தோழராகவே கொண்டார் என் பதைச் சேக்கிழார், வாழிய மாமறைப் புற்றிடங்கொள் மன்னவன் ஆரரு ளால்ஓர் வாக்குத் தோழமை ஆக உனக்குநம்மைத் தந்தனம் நாம்முன்பு தொண்டு கொண்ட வேள்வியில் அன்றுநீ கொண்ட கோலம்என்றும் புனைந்துநின் வேட்கை தீர வாழிமண் மேல்விளை யாடுவாய்என் ரூரூரர் கேட்க எழுந்த தன்றே 33