பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/603

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாரானைப் பருவம் 521 தன்னிடம் இருந்த குழந்தையை ஏவி அப்பா என்று வணிகனைக் கட்டி அணைக்கச் செய்தாள். என்ருலும், வணிகன் அவ்வழி வந்த வேளாளரிடம், 'ஐயா! இவள் என் மனைவி யல்லள். இவள் ஒரு பேய்: நான் இவளோடு இங்கு இவ்விரா இருப்பேைைல், இவள் என்ன அறைந்து கொன்று விடுவள்” என்று கூறினன். இருவர் பேச்சுக்களையும் கேட்ட வேளாளர் கட்கு இன்னவாறு தீர்ப்புக் கூறுவது என்பது புலகைவில்லை. இறுதியில் அவர்கள் வணிகனே நோக்கி, "நீ இவளோடு இன்று இரவு இங்கு இரு. அப்படி இருப்பதால் நீ இறக்க நேரின். நாங்கள் எழுபதின்மரும் உன் ஒர் உயிர் பொருட்டு உயிர் விடுவோம்' என்று கூறி இருக்குமாறு வற்புறுத்திச் சென்றுவிட்டனர். வணிகன் இரவு அவளோடு இருந்தான் ; அவ்விரவே இறந்தான். மறுநாள் வேளாளர்கள் வந்து கண்டபோது மாதராளும், மகவும் அச்சத்திரத் தில் இல் லாது, வணிகன் மட்டும் இறந்து இருத்தலைக் கண்டு, தாம் சொன்ன சொல்லை நிறைவேற்றும் நிலேயில் தீ வளர்த்து அதில் மூழ்கி இறந்தனர். இவ்வரலாறே இப்பாடலில் அமைந்துள்ளது. இவ்வாறு நீலி வஞ்சித்து வணிகனக் கொன்ற குறிப் பைத் திருஞானசம்பந்தரும், வஞ்சப்படுத்து ஒருத்தி வாணுன்கொள்ளும் வகை அஞ்சும் பழையனுரர் (கேட்டு என்றும் பாடியுள்ளனர். இவ்வரலாற்றை உமாபதிசிவனரும், மாறுபடு பழையனூர் நீலிசெய்த வஞ்சனேயால் வணிகன் உயிர் இழப்பத் தாங்கள் கூறியசொல் பிழையாது துணிந்து செந்தீக் குழியில்ஏழு பதுபேரும் முழுகிக் கங்கை ஆறணிசெஞ் சடைத்திரு வாலங்காட் டப்பர் அண்டமுற நிமிர்ந்தாடும் அடியின் கீழ்மெய்ப் பேறுபெறும் வேளாளர் பெருமை எம்மால் பிரித்தளவிட் டிவள வெனப் பேச லாமோ என்று புகழ்ந்து பாடினர்.