பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/604

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

522 வாரானைப் பருவம் சேக்கிழாரும் இதனைத் திருக்குறிப்புத் தொண்டர் புராணத்துள், நற்றி றம்புரி பழயனூர்ச் சிவத்தொண்டர் நவைவந் துற்ற போதுதம் உயிரையும் வணிகனுக் கொருகால் சொற்ற மெய்ம்மையும் தூக்கிச் சொல்லையே காக்கப் பெற்ற மேன்மையில் திகழ்ந்தது பெருந்தொண்டை நாடு. என்று குறித்துள்ளனர். கம்பரும் இக்கதைக் குறிப்பை, 'நீலி தனக்கஞ்சி நின்ற வணிகனுக்காகக் கோலி அபயம் கொடுத்த கை' எனத் திருக்கை வழக்கம் என்னும் தம் நூலில் குறிப்பிட்டுள்ளனர். சத்தியத்தைக் காக்க உயிர் விட்டனர் ஆதலின், அவர்கள் ஆலங்காட்டப்பர் திருவடி அடையும் பேறு பெற்றனர் என் பார். 'மலர்த் தாள் அடைந்தார்' என்ருர். திருவாலங்காடு அரக்கோணம் செல்லும் இரயில் மார்க் கத்தில் அமைந்த ஒரு ஸ்டேஷன். அங்கிருந்து மூன்றுகல் தொலைவில் இஃது உளது. பல கல்வெட்டுக்களும்,செப்பேடும் உடையது. பொற்சபை, வெள்ளிச்சபை, சித்திரச்சபை, தாம்பரச்சபை, இரத்தினச்சபை என்ற நடராசப் பெருமானது ஐந்து சபைகளில் இரத்தினச்சபையினை உடையது. பொற் சபை சிதம்பரத்திலும், வெள்ளிச்சபை மதுரையிலும், சித் திரச்சபை குற்ருலத்திலும், தாம்பரச் சபை திருநெல்வேலியிலும் உள்ளன. இத்தலத்தில் காளியின் பொருட்டு ஆடிய தாண்டவம், ஊர்த்துவத் தாண்டவம் எனப்படும். ஊர்த்துவத் தாண்டவங் என்பது 'இடக்காலைக் காதளவு தூக்கி ஆடிய நடனம். காளிகான இறைவர் திருநடம் புரிந்தார் என்பதை 'ஆடினர் காளிகான ஆலங் காட் டடிகளாரே என்று அப்பர் பாடியதைக் காணவும். ஊர்த்துவத் தாண்டவமூர்த்தி எண் தோளுடன் காண் பார்க்கு மிக்க கவர்ச்சியுடன் இன்றும் அங்கு விளங்கிக் கொண்டிருக்கின்றனர்.