பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/606

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. அண்டம் அளவும் வாைநாட்டில் அரசர் கலகம் ஆதலினுல் ஆங்காங் கொருவி வணிகர்ளலாம் அயல்நாட் டகம்புக் கினிதமர்ந்து விண்ட கலகத் திறம்தெரிந்து மேய தத்தம் இட்ம்புக்க விதம் உள் உணர்ந்து தம்சரணு மேவி இருந்த மடக்கொடியை மண்ட அழைத்துக் கொடுசென்றிம் மடமா தினைக்கொள் ளுதிர் என்ன மயங்கல் கண்டு தங்கைஎனும் வாய்மை கொடுமைத் துனக்கேண்மை கொண்ட குலத்தில் உதித்தருள் பெய் கொண்டல் வருக வருகவே குன்றைப் பெருமா னிகைக்குன்றைக் கோமான் வருக வருகவே (அ. சொ அண்டம் - வானம், அளவும் - அளாவி உயரும், வரை நாட்டில்-மலே நாட்டில், சேரநாட்டில், ஒருவி. விட்டு நீங்கி, நாட்டகம்-நாட்டில், விண்ட-நீங்கிய, திறம்கூறுபாட்டை, மடக்கொடியை-இளமையான பூங்கொடி போன்ற மாதின, கேண்மை-முறைமை, உறவு, மண்டவிரைந்து. விளக்கம்: மலைகள் அண்டம் அளவும் அளாவியது என்றது உயர்வு நவிற்சி அணியின் அமைப்பாகும். இவ்வ்ாறு புகழ்தல் புலவர்களது இயல்பு என்க. வான மதிதடவல் உற்ற இளமந்தி கான முதுவேயின் கண்ணேறித்-தானங் கிருந்துயரக் கைநீட்டும் ஈங்கோயே நம்மேல் வருந்துயரம் தீர்ப்பான் மலை என்ற ஈங்கோய் மலை எழுபதில் மலையின் உயர்ச்சியினைக் காட்டியது காண்க. நாட்டில் கலகம் ஏற்பட்டபோது