பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/613

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வtரானைப் பருவம் 531 சுந்தரர் உண்ணிரின் வேட்கையுடன் உறுபசியால் மிக வருந்தித் திருக்குருகாவூர் வழியே வருவதை அறிந்த திருச் சிற்றம்பலவர், அவர் தம்மை எதிர்நோக்கி, சாலமிகப் பசித்தீர்இப் பொதிசோறும் தருகின்றேன் காலம்இனித் தாழாமே கைக்கொண்டிங் கினிதருந்தி ஏலநறும் குளிர்தண்ணிர் குடித்திளேப்புத் தீரும்என மொழிந்தார். கடல் நீர் முந்நீர் என்ற பெயரையும் பெற்றுளது. கடல் தன்னகத்து ஆற்று நீர், ஊற்று நீர், வேற்று நீரையும் கொண்டு திகழ்வதே இதற்குக் காரணம். வேற்று நீர் ஆவது தூய்மையற்ற நீர் ஆகும். அந்நீரையும் கடல் ஏற்றுத் தன் மயமாக்குகிறது. அதுபோலவே இறைவர் இன்னர் இனியர் என்ற வேறுபாடு கருதாது ஏற்று அருள் தருதலின் கருணைக் கடல் என உவமிக்கப் பட்டனர் என்க. 'எவ்வுயிர்க்கும் இயல்பானுன்' என்பது மணிமொழி அன்ருே? கற்றதன் பயன் கல்வி அறிவால் செருக்குறுதல் அன்று. கற்றதன் பயன் கண்ணுதல் கழலடி வணங்குவதே ஆகும். இதனை நன்கு உணர்ந்த திருவள்ளுவர் 'கற்றதன) ல் ஆய பயன்என்கொல் வாலறிவன் நற்ருள் தொழஅர் எனில்' என அருள் உபதேசம் சுெய்துள்ளனர். இதுதான் கற்றதன் பயன் எ ன் ப ைத ச் சேக்கிழாரும் சிறுத்தொண்டர், புராணத்திலும், உள்ள நிறை கலைத்துறைகள் ஒழிவின்றிப் பயின்றவற்ருல் தெள்ளுவடித் தறிந்தபொருள் சிவன்கழலில் செறிவென்றே கொள்ளும் உணர் வினில்முன்னே கூற்றுதைத்த கழற்கன்பு பளளமடை யாயஎனறும பயின்றுவரும் பண்புடையார் என்று அருளிப் போந்தார்.