பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சசு சேக்கிழார் பிள்ளைத் தமிழ்ப் பாடல் கருத்துச் சுருக்கம் செ. 2. தாமரை மலரைவிடச் சேக்கிழாரின் பாத தாமரைகள் சிறப்புடையன எனல். இரண்டிற்கும் உள்ள வேற்றுமைகள், வேளாளர் புகழ் வாய்ந்தவர்; சேக்கிழாரின் புன்முறுவல் அன்பர்கட்கு மகிழ்வையும், ஏனைய சமயத்தவர் கட்கு அச்சத்தையும் தரும். ஆறு சமயத்தவர். பக்கம் 489—494 செ. 3. முத்தி அடைதற்குரிய பல்வேறு வழிகளைப் பல்வேறு மதங்கள் கூறும் கருத்துக்கள், ஐந்துவகைக் கந்தம். இவற்றின் விளக்கம், மூவகைக் குணங்கள், இவற்றின் விளக்கம். இருவினே, சேக்கிழார் செந்தமிழ்ப் பெருமை அறிந்தவர். (இப்பாடல் சிவப்பிரகாசத்தில் வரும் முத்தி பேதங்களின் இயல்பு கூறப்பட்ட குறிப்புக்களைக் கொண் டது. பல மதங்களைப் பற்றிய குறிப்புக்களையும் கொண்டது) பக்கம் 494-503 செ. 4. முத்துக்கள் பிறக்கும் இடங்கள், முத்துக்களைக் குவித்தல், சேக்கிழார் குழந்தை அக்குவியலில் ஆடல், அன பாயன் சேக்கிழார்க்குச் செய்த சிறப்பு. பக்கம் 504-507 ச்ெ. 5. மலங்களின் வகை, மலபரிபாகம், சத்தினி பாதம் பற்றிய விளக்கம். புத்திர, தாச, சக சன்மார்க்க விளக்கம், ஆடையின் மென்மை, வேளாளர் மேன்மை. பக்கம் 507-518 செ. 6. பழையனூர் நீலி வரலாறு; வேளாளர் சொல் தவருமை, வேளாளர் மாண்பு, வேளாளர் தீயில் பாய்தல்; திருவாலங்காட்டுக் குறிப்பு. பக்கம் 518-523 செ. 7. சேர நாட்டு வணிகர் வேற்று நாடு புகுதல், வணிகர் மகளை வேளாளர் காத்தல், இவ்விரு மரபினரும் உறவு கொண்டாடல், வேளாளர்கள் பாண்பு. பக்கம் 524–527 செ. 8. சேக்கிழாரை மேகமாக உருவகம் செய் திருத்தல்; அதற்குரிய காரணம். குன்றத்தூர் மாளிகை மாண்பு. பக்கம் 527-535