பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச.அ சேக்கிழார் பிள்ளைத் தமிழ்ப் பாடில் கருத்துச் சுருக்கம் செ. .ே சேக்கிழார்க்கும் சந்திரனுக்கும் உள்ள வேறு பாடு, சந்திரன் ராகு கேதுக்களால் விழுங்கப்படுதல்; இதற்குக் காரணம். ராகு கேதுக்கள் வரலாறு, சேக்கிழார் முன் பதஞ்சலி முனிவர் வருதற்கு அஞ்சுதல்; சேக்கிழார் ஒரு தூக்கில் (ஒரு பாட்டில்) ஏழு பரவைகளை (கடலையும்) பரவை எனும் சொல்லையும் எளிதில் நிறுத்தியவர் எனல் குன்றத்துார் மாளிகைகளின் மாண்பு, இதில் பேத உபாயம் உளது. பக்கம் 571-575 செ. 7. இறையனுர் களவியல் இலக்கண நூல் செய் தது, மாதர் வர்ணனை, கன்னியர் சந்திரனைத் தொழுதல், சேக்கிழார் கவி, கமகன், வாதி, வாக்கி ஆவார் எனல். இதில் தான உபாயம் உளது. பக்கம் 576-591 செ. 8. திருஞான சம்பந்தர் கூனைப் போக்கியது; சுந்தரர் கூனை நீக்கியது; சேக்கிழார் தம் பாடலில் 'கூன்' எனும் உறுப்பையும் அமைக்காமை, சேக்கிழார் நாவலர் களால் போற்றப்படுபவர். இதில் தான உபாயம் உளது. பக்கம் 591-597 செ. 9. சமணர் இயல்பு, சேக்கிழார் சந்திரனது களங்கம் போக்கு வார், சேக்கிழார் சந்திரன் மாட்டு வைத்த கருணை, குன்றத்துார் நீர்வளம். இதில் தான உபாயம் உளது. பக்கம் 597-600 செ. 10. சேக்கிழார் சினம் கொள்ளுதற்கு முன் சந்திரனை வருக எனல், குன்றத்துார் மாண்பு. இது தண்ட உபாயம் கூறுவது. பக்கம் 600-604 8. சிற்றில் பருவம் செய்யுள் 1. சிறுமியர் முத்தால் சிறு வீடு கட்டி விளையாடுதல்; சேக்கிழாராம் குழந்தையைச் சிற்றிலைச் சிதைக்காதிருக்க வேண்டுதல், தெய்வலோகம் அளவு குன்றத் தார் மரங்கள் உயர்ந்து வளர்ந்திருத்தல், தேவர்