பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/640

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

558 அம்புலிப் பருவம் சண்டேசுரர் தந்தையான எச்சதத்தன் இறைவனது முழுக்குக்கென வைக்கப்பட்ட பால் குடங்களைத் தன் காலால் இடறிச் சிந்தினன்' இதனை உணர்ந்த சண்டேசுரர் இரு கால்களையும் சிதைத்தார் என்று சேக்கிழார் பாடுகிரு.ர். 'சிறுவர் இறையில் தீயோனைத் தந்தை எனவே அறிந்து அவர் தாள்கள் சிந்தும் தகுதியினல் * எறிந்தார்” என்று பாடினர். ஒரு காலேயே வெட்ட வேண்டி இருக்க, இரு கால்களேயும் வெட்டலாமா என்று ஒரு சிலர் வினவலாம் அன்ருே? அவர்கள் உய்த்து உணரும் வகையில் பால் குடத்தை இடறிச் சிந்துதற்கு மற்ருெரு கால் நிலத்தில் ஊன்றி இருக்கத் துணை செய்தமையின், அதுவும் குற்ற முடையது என்ற கருத்தில் இரு தாள்களும் தண்டித்தற் குரியன என்ற கருத்தில் தாள்கள் சிந்தும் தகுதியினல் என்றனர். நெடுமாறன், ‘சமணர்கள் சம்பந்தருடன் அனல்வாதம், புனல் வாதம் புரிந்து தோற்றனர். ஆகவே அவர்களைக் கழுவில் ஏற்றுக’ என்று ஆணேப் பிறப்பித்தனன். இப்படிப் பிறப்பித்தபோது சம்பந்தர் தடுக்காது வாளா இருந்தனரே! அது அவர் பெருமைக்கு அடாது எனத் திருஞான சம்பந்தர்க்குக் குற்றம் கூறக் கூடும் என்று தம் நுண் ணறிவால் உணர்ந்த சேக்கிழார் அத்தகையவர்கட்கு விடை கூறுவார் போல், புகலியில் வந்த ஞானப் புங்கவர் அதனைக் கேட்டும் இகலிலர் எனினும் சைவர் இருந்துவாழ் மடத்தில் தீங்கு தகவிலாச் சமணர் செய்த தன்மையால் சாலும் என்றே மிகைஇலா வேந்தன் செய்கை விலக்கிடா திருந்த வேலை என்று பாடி அமைத்தனர். இங்ங்ணம் எல்லாம் பாடுதற்கு உண்மை ஞான அறிவு வன்மை இன்றெனில் இயலுமோ? இதனால்தான் பிள்ளை அவர்கள், 'எஞ்ஞான்றும் உரவோன் எம்.வள்ளல்' என்றனர்.