பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/646

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

564 அம்புலிப் பருவம் “Isis dancing is sympolical perpetwal and gracious action through out the universe and in loving heart”— Dr. G. U. Pope. “ It is the image of his rhythimic play as the sourse of all movements with in the cosmos, Universe Love and Order.” “The purpose of the dance in the release the countless souls of men from the snare of illusion.” “Chidambaram in the Centre of the Universe i. e. within the heart.” Dr. A. K. Kumaraswamy. இவ்வாங்கிலப் பகுதிகளின் திரண்ட பொருள், 'உலகம் பல அணுக்களால் நிறைந்தது. அவ்வணுக்கள் ஓர் ஒழுங் கான நடனத்தால் இயங்கிக் கொண்டிருக்கின்றன. சிவ பெருமான் உலக நடுவில் நடனம் இயற்றிக்கொண்டிருக் கிரு:ன். அத்துடன் என் உள்ளத்திலும் நடனம் புரிகின்றன். அவன் உலகில் நடனம் புருகிருன். ஆன்மாவின் உள்ளும் தாண்டவம் செய்கின்றனன்.” நடராசப் பெருமானது புன்னகையால் எல்லா உலகங் களும் ஒளிவிட்டு விளங்குகின்றன. அவனது இன்ப நடனத் தால் நிலைத்துள்ளன.” 'தாண்டவமூர்த்தியின் தா ன் ட வ ம் ஐம்பெருந் தொழில்களைக் குறிக்கும்.குறியாகவும், இடைவிடாததாகவும் கருணைக்குக் காரணமாகவும் அமைந்த அசைவு. இவ்வசைவு உலக முற்றிலும், அன்பார்ந்த உள்ளத்திலும் அமைந்து நிகழ்கிறது. 'நடராச வடிவமே தாள சந்தம் நிறைந்த நடன வடிவ மாகும். அஃது ஒழுங்கு முறையில், உலகங்களின் எல்லா அசைவுகட்கும் காரணமானது.” "இந்நடனத்தினே நடிப்பதன் அடிப்படைக் காரணம், எல்லை அற்ற உயிர்கள் மாயவலையில் சிக்குண்டிருத்தலினின்று மீட்பதற்காகும்" என்பதாகும்.