பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/656

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5'74 அம்புலிப் பருவம் ವಷ್ರ' என்றனர். பாரமாவது பெருமை, சந்திரன் திருப்பாற்கடலில் தோன்றியதை வில்லியார், 'அம்புராசி யின் ஆர் அமுதுடன் அவதரித்தோன்' என்றனர். சுந்தரர் தம் எதிரே கண்ட மாதராரை, யாவன்?" என்று அ ரு கி ல் நின்ருரை வினவினர். அதுபோது அவர்கள் நங்கை பரவையார்' என நவின்ருர்கள். அவ் வளவு தான்! ஆளுடைய நம்பியார் அப்பரவை என்ற பெயரைப் பல பொருள் தரும் நிலையில் பன்னுவாரா யினர். இதனைச் சேக்கிழார் ஒரே செய்யுளில் ஏழுமுறை பரவை என்னும் சொல் பயின்று வரப் பாடியுள்ளனர். அப்பாடல், பேர்பரவை பெண்மையினில் பெரும்பரவை விரும்பல்குல் ஆர்பரவை அணிதிகமும் மணிமுறுவல் அரும்பரவை சீர்பரவை ஆயினுள் திருவுருவின் மென்சாயல் ஏர்பரவை இடைப்பட்ட என் ஆசை எழுபரவை என்பது. முதலில் பரவை என்னும் மொழி அம்மையாரின் திருப் பெயரைச் சுட்டி நிற்கிறது. இரண்டாவது பரவை முன்னும் பின்னும் உள்ள சொற்களுடன் இயைந்து 'பெரு+உம்பர் + அவ்வை' எனப் பிரிக்கப்படும் நிலையில் உள்ளது. அதாவது தேவலோக சபையினர் விரும்பும் தாய் என்பது பொருள். மூன்ருவது பரவை என்பது ஆர்பு + அரவு + ஐ எனப் பிரிக்கப்பட்டு அல்குலுக்கு ஒப்புக் கூறப்படும் ஆதிசேடனும் போற்றும் தலைவி என்னும் பொருள் தந்து நிற்கிறது. நாலாவது பரவை. அரும்பர்+அவை என்ருகிப் பற்கள் முல்லே அரும்பு போன்றவை என்ற பொருளில் உள்ளது. ஐந்தாவது பரவை, இலக்குமி போற்றும் அழகள்