பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/661

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்புலிப் பருவம் 579 என்னும் ஒளவையார் பாடலால் அறிக. தவமுறையினேப் பற்றித் தொல்காப்பியர், காமஞ் சான்ற கடைக்கோள் காலை ஏமம் சான்ற மக்களொடு துவன்றி அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே என்று கூறுதல் காண்க. - பட்டாங்கு நூல் (Philosophy) உணர்ச்சியினை இலக் கணத்தில் அமைந்த பெயர்களால் தெரிந்து கொள்ளலாம். உயிர், மெய், வினை போன்ற சொற்களைக் காண்க. 'மெய்யின் வழியே உயிர் தோன்று நிலையே” என்ற நூற் பாவில் தத்துவ சாத்திரக் கருத்து இருத்தலே ஒர்க. ஒன்றறி வதுவே உற்றறி வதுவே இரண்டறி வதுவே அதனெடு நாவே மூன்றறி வதுவே அவற்ருெடு கண்ணே நான்கறி வதுவே அவற்ருெடு மூக்கே ஐந்தறி வதுவே அவற்ருெடு செவியே ஆறி வதுவே அவற்ருெடு மனனே நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே என்னும் தொல்காப்பிய நூற்பா உயிர்நூல் (Zoology) உடல் நூல் (Physiology) கருத்துக்களுக்கு அரண் செய் வதைக் காண்க: நிலம்தி நீர்வளி விசும்போ டைந்தும் கலந்த மயக்கமே உலகம் ஆதலின் என்னும் தொல்காப்பிய நூற்பா, பெளதிக சாத்திரத்திற்கு (Physics) இடம் தருதலை உணரவும். ஒழுக்க நூற்கள் (Ethics) தமிழில் இருந்தமையினைப் பதினெண்கீழ்க் கணக்கு நூற்களைக் கொண்டே அறியலாம். உளநூல் (Psychology) உண்மைக்குத் தொல்காப்பிய மெய்ப் பாட்டியல் போதிய சான்ருகும். கணிதநூல் (Arithmetic)