பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/663

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்புலிப் பருவம் 58 Í என்று வாகைப் பொது இலக்கணம் வகுத்து அத்தொல் காப்பியமே கூறுதல் காண்க, 'ஒசை பண்பிற் ருகாயம்மே' 'கிழக்கு முதல் வடக் கிற்கு ஏதுத் திசையே' என்னும் அகத்தியச் சூத்திரங்கள் தருக்க நூல் அறிவிற்குச் சான்ருகும். சிற்பம், உழவு, நெசவு, வாணிபம், முதலான கலைகள் தமிழில் இருந்தமை காண்க. ஒவியம், கரவடம், களு, பரி, நிமித்தம், யானை, முதலியன பற்றிய நூற்களும், சமையற் கலே பற்றிய மடை நாலும், Geology நூல் அறிவு பற்றிய புதையல் நூலும் தமிழில் இருந்தன. இவை அனைத்தையும் உள்ளடக்கியே 'செறிதமிழ்' என்றனர். சங்கத்து முதன்மையோன் இறைவனும். ஆலவாய் அவிர்ச் சடையன். இது 'கண்ணுதல் பெருங்கடவுளும் கழக மோடமர்ந்து' என்ற தொடரால் விளங்கும். இறைவன் நவின்ற நூல் அன்பின் ஐந்தினை என்னும் இறையனர் அகப் பொருள் நூலாகும். இதனை இறையனர் களவியல் என்றும் கழறுவர். பாண்டிய நாட்டில் ஒரு முறை பஞ்சம் வந்துற்றது. அதனுல் புலவர்கள் வேற்றிடம் புகலாயினர். பஞ்சம் நீங்கியதும் புலவர்கள் வந்துற்றனர். அவர்கள் எழுத்து இலக் கணம் சொல்ல இலக்கணம் அறிந்திருந்தனர். பொருள் இலக் கணம் அறிந்தவர் இல்லேயே என்று பாண்டியன் வருந்தினன். அவனது வருத்தம் தீர இறைவன் அறுபது நூற்பா அடங்கிய இந்நூலைச் செய்து தந்தனன். இதனைக் கல்லாடம், "மாறனும் புலவரும் மயங்குறு காலை கடல்அமு. தெடுத்துக் கரையில்வைத் ததுபோல் அன்பின் ஐந்தினேனன் றறுபது சூத்திரம் பரப்பின் தமிழ்ச்சுவை திரட்டி மற்றவர்க்குத் தெளிதரக் கொடுத்த தென்தமிழ்க் கடவுள்' என்று கூறுதல் காண்க.