பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/674

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

592 அம்புலிப் பருவம் சந்திரன் தன் ஒளியால் பைங் கூழ்களை வளர்த்தல், தனுள். தன்னுள் பிறங்கு-விளங்கு பேணும்-மதிக்கும், பாராட்டும், திருநாவலூர்-சுந்தரர், சீகாழியார்-சீர்காழிப்பதியில் அவ தரித்த திருஞானசம்பந்தர் செயிர்-குற்றம், கூன்-வளைவு, கூன்-செய்யுள் உறுப்புக்களில் ஒன்று, ஒரு-ஒப்பற்ற நாவல்பொன், (அதாவது சம்புநதம்) என்னும் பொன், பொலத் தினும்-பொன்னைவிட, நவில்-சொல் மதி-மதித்துக்கொள், போற்று, பரவு-போற்றும், நாவலோர்-நாவன்மையால் பேசும் திறமுடைய சொற் பொழிவாளர்கள். விளக்கம்: நாவலோ என்பது, நெல்போர் தெழிக்கும் எருதுகளைத் துரப்பதற்கு உழவர் செய்யும் ஒசை. இதனே முத்தொள்ளாயிரம் "காவல் உழவர் கடுங்களத்துப் போர் ஏறி நாவலோஒ என்றிசைக்கும் நாள் ஒதை-காவலன் கொல்யானே மேலிருந்து கூற்றிசைத்தால் போலுமே கல்யானைக் கோக்கிள்ளி நாடு’’ இவ் ஒசை நீங்காத மருதவிடம் என்ற தல்ை நெல்வளம் இனிது புலப்படும். சந்திரனது ஒளி பயிர் வளர்ச்சிக்கு மிகவும் தேவைப்படுவதாகும். அதனல்தான் 'பயிர் செடி கொடி யெலாம் கருக்கொள்ள நீ உபகரித்த' என்றனர். சேக்கிழார் செய்ந்நன்றி அறியும் பண்பினர் என்பதைச் சந்திரன் பயிர்கள் வளரத் தன் ஒளியினைப் பரப்பினேக்கு நன்றி செலுத்தி அதனைப் பாராட்டுபவர் ஆதலே 'பேணுதிருந்தான் அலன்” என்றனர். திருநாவலூர் என்பார் சுந்தரர். சுந்தரர் திருநாவலூரில் பிறந்தமையின் இப்பெயர்க்கு உரியர் ஆயினர். இவரது பெற்ருேர் பதி 'திருமறையவர்கள் நீடும் திருநாவலூராம் அன்றே'என்பதால் அறிகிருேம். இவரது பெற்ருேர் இவர்க்கு இட்ட பெயர் 'நம்பி ஆருரர் என்றே நாமமும் சாத்தி' என்பதல்ை உணரலாம். என்ருலும் சுந்தரர் தம் திருப் பெயரைத் திருநாவலூரர் என்றும் தமது பதிகங்களின் ஈற்றுப்பாடலில் குறிப்பிட்டுள்ளனர். நல்லவர் தாம்பரவும்