பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/681

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்புலிப் பருவம் 599 மந்திரச் செயல் வாய்த்தில மற்றினிச் செய்யும் புந்தி யாவதிங் கிது.எனப் பொதிதழல் கொடுபுக் கந்தண் மாதவர் திருமடப் புறத்தயல் இருள்போல வந்து தம்தொழில் புரிந்தனர் வஞ்சனை மனத்தோர் என்று உணர்த்தியுள்ளார். ஆகவே சமணர், சழக்கரே, சேக்கிழார் பெருமாளுர் சமணம் பரவாது சைவம் பரவச் செய்தனர் என்பதை அநபாயச் சோழன் சமண நூலாம் சிந்தாமணியில் சிந்தை செலுத்தி இருந்ததை மாற்றிச் சைவசமய நூலில் ஈடுபடச் செய்தது கொண்டு அறிகிருேம். சைவம் ஒங்கச் சமணசமயம் ஒடுங்க உளங்கொண்டவர் சேக்கிழார் என்பதை 'வேதநெறி தழைத்தோங்க மிகு சைவத்துறை விளங்கப பூத பரம்பரை பொலிய” என்றும், 'பரசமயம் நிராகரித்து நீருக்கும் புனைமணிப்பூண் காதலன்' என்றும், “பரசமயத்தருக் கொழியச் சைவமுதல் வைதிகமும் தழைத்தோங்க, எங்கும் அவம் பெருக்கும் புல் அறிவின் அமண்முதல்ாம் பரசமயப் பவம் பெருக்கும் புரைநெறிகள் பாழ்பட *** சிவம் பெருக்கும் பிள்ளையார்' என்று அமயம் வரும்போதெல்லாம் உணர்த்தி இருப்பது காண்க. ஆக இவர், 'சழக்கர் மதமாம் களங்கம் பரவல் நீக்கி உயர் சைவ நிலை எங்கும் ஆக்கும்' என்றது தக்கதே. களங்கம் போக்கு தலில் கை வந்த சேக்கிழார் சந்திரனது களங்கத்தையும் போக்குவார் என்று அவனிடம் கூறி அழைக்கின்றனர் ஆசிரியர். சந்திரனுக்குக் களங்கம் இருத்தல் ஒரு மாசு. அது நீங்கப்பெறும் நிலையுற்ருல் அவன் நிலை மேலும் உயரும். ஆகவே, 'இதனினும் உறுதி என்ன?’ என்று அவனிடம் கூறினர். சான்ருேர் என்பார் எல்லாப் பண்பும் நிறைந்தார் ஆவார். சால், நிறைவு. அவர்கள் பண்பு அளத் தற்கரியது. 'ஆன்று அவிந்து அடங்கிய சான்ருேர்” என்பர் பிசிராந்தை யார். அத்தகைய சான்ருேர் பலர், பல கலைகளும் ஒன்று சேர்ந்தாற்போல் உருக்கொண்டு சேக்கிழாரது திருவருள்