பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/683

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்புலிப் பருவம் 661 (அ. செச) கறுக்கச்சிவத்தல்-கோபித்தல், பூண்டான்மேற்கொண்டான், திறம்-உள்ள வகை, போதலுற-செவியில் நுழையுமாறு புகன்ருேம்-கூறினுேம், முனிந்திடில். கோபித் தால், புன்மையான்-அற்பன், தாழ்ந்தவன், கவி-பாடல், புராதனன்-முன்னைப்பழம் பொருட்கும் முன்னைப்பழம் பொருளான இறைவர், வீதல்உறல்-சாதல், உள்ளது.கொல்இருக்கிறதா, ஒர்ந்து - அறிந்து, மேயினேன் - வந்தேன், மிக்காதல்-மேன்மை, விழைதரும்-விரும்பும்" விளக்கம் : சந்திரன் அழைத்தும் வாராததுபற்றிச் சேக்கிழார் சினம் கொண்டார் என்பது முதல் மூன்றடி களின் கருத்து. சேக்கிழார் முற்றிலும் முனியாது சற்றே முனிந்தனர் என்பதால், அவரது குண மேம்பாடு தெரிய வருகிறது. அவரது வெகுளி, குணமெனும் குன்றேறி இருந் தார் வெகுளி.வெகுளி கொண்டு முற்றிலும் முனிந்திருந்தால் அவன் உய்யான். இவ்வாறு பேரறிஞர்கள் தமது சினத்தைச் சிறிதே காட்டுவர் என்பதற்குத் திருஞானசம்பந்தர் ஒரு சான்றல்லரோ? அவர் தமது மடத்தில் சமணர் வைத்த தீயை மன்னன்பால் ஏகுமாறு சாற்றியபோதும் 'டையவே சென்று பாண்டியற்காகவே” என்றனர் அல்லரோ? அங்ங்ணம் பையவே என்றதன் கருத்து இன்னது என்பதை விளக்கவந்த ஆசிரியராம் சேக்கிழார், 'பாண்டிமாதேவியார் தமது பொற்பில் பயிலும் நெடு மங்கல நாண் பாதுகாத்தும் ஆண்டகையார் குலச்சிறை யார் அன்பிலுைம், அரசன்பால் அபராதம் உறுதலாலும், மீண்டு சிவநெறி அடையும் விதியினலும் வெண்ணிறு வெப்பகலப் புகலிவேந்தர் தீண்டியிடப் பேறுடையன் ஆதலாலும், தீப்பிணியைப் பையவே செல்க என்ருர்” என்று விளக்கினர். சிவனர் யமன உதைத்தபோதும் உரப்பாக உதையாது சிறிதே உதைத்தான் என இறைவன் கருணையினைக் கச்சியப்ப சிவாசாரியார்,