பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/699

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்றில் பருவம் 617 வையம் அனைத்தும் ஈன்றெடுத்தும் வயது முதிரா மடப்பாவை மடியில் இருத்தி முலேஊட்டி வதனத் தனைக்கில் உன்கழல்கால் செய்ய சிறுதுாள் செறியாதோ சிறியேம் சிற்றில் சிதையேலே திரைமுத் தெறியும் திருச்செந்துார்ச் செல்வர் சிற்றில் சிதையேலே என்று பாடிய பாடலையும் பன்முறை படிக்க. பெரியோர்கள் திருவடிகளே வந்தித்து மலரிட்டு அர்ச் சிப்பது சைவ மரபு. இதனைப் பெரிய புராணத்துள், பரக்கக் காணலாம். இளேயான் குடிமாற நாயனர் புராணத் துள் அடியாரை அர்ச்சித்தவிதம் கூறப்பட்டிருத்தல் காண்க. 'கொண்டு வந்து மனப்பு குந்து குவாவு பாதம் விளக்கியே, மண்டு காதலின் ஆசனத்திடை வைத் தருச்சனே செய்த பின்,' என்று கூறப்பட்டிருத்தல் கொண்டு, பெரியோர்கள் திருவடி களே மலரால் அர்ச்சித்த முறையைக் காண்க. ஆகவே, சேக்கிழார் திருவடி மலர் தோய்தற்குரியது என்பதும், அது மணல் தோய்தற்குரியது அன்று என்பதும் கூறப்பட்டன. மாதர்களின் பற்கள் வெண்ணிறமானவை. அவ் வெண் னிறத்திற்கு உவமையாக ஈண்டு மயில் இறகின் அடிப்பகுதி கூறப்பட்டது. 'முருந்தேர் இளநகை' என்று சிலம்பு செப்புதல் காண்க. மடமாதர் என்றது இளம் பருவப் பெண்களேயாகும். அறிவில்லா மாதர் என்பதன்று. சோலைகளில் மாதர்கள் வந்து சேர்வர் ஆதலின் : 'மடமாதர் முயங்கும் பொழில்’ என்றனர். மாதர்கள் சோலையை விரும்பிப் புக்கதைப் பரஞ்சோதியார், கூந்தல் பிடியும் பரியும் ஊர்வார் கொழுநர் தடம்தோள் ஏந்தச் சயமா தென்னத் தழுவா இழிந்து பொழில்வாய்ப்