பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/703

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்றில் பருவம் 621 பால் தம் பிள்ளையை விருப்புடன் எடுத்துக் கொஞ்சவருவா ரிடமும், தம் பிள்ளைகட்கு ஏதேனும் ஏதம் வருமென அவர் கள் எடுக்கையில், அவர்களையும் கோபிப்பர். ஆகவே, எடுப் பாரையும் சினப்பர் என்றனர். அன்றித் தாம் பெருது பிறர் பிள்ளைகளை எடுத்து இனிது உரையாடுகிறவர்களும் சிற்றில் சிதைப்பதால் ஊறு உறும் ஒன்று அன்பால் கோபிப்பார் என்று கூறினும் அமையும். திரு. பிள்ளை அவர்கள் தொண்டை நாட்டினைப் பலபடி புகழ்ந்து, இப் பாட்டில் கற்றவர்கள் நிறைந்த தொண்டை நாடெனச் சிறப்பித்தனர். 'தொண்டை நாடு கல்வியால் நிறைந்த சான்ருேர்கட்கு இருப்பிடம் என்பதை நன்கு ஒர்ந்தே ஒளவையாரும் தெண்ணிர் வயல் தொண்டை நன்னடு சான்ருேர் உடைத்து' என்று வரையறுத்து மொழிந் துள்ளனர். கற்ருர் என்படுபவர் இராமலிங்க சுவாமிகள், விசாகப்பெருமான் ஐயர், சரவணப்பெருமான் ஐயர், கந்தப் பையர், அந்தகக் கவி வீரராகவ முதலியார், படிக்காகப் புலவர், இராமச்சந்திரக் கவிராயர், நல்லாப் பிள்ளை, அநதாரியப்பர், தொட்டிக் கலை சுப்பிரமணிய முனிவர். நூல் பல கண்ட சான்ருேர்கள் சேக்கிழார், கச்சியப்ப சிவாசாரி யார், திருவள்ளுவர், அருணகிரியார், குணவீர பண்டிதர், பவணந்தி முனிவர் முதலியோர்ள். நூலுக்கு உரை கண்ட வர்கள் பரிமேலழகர், திருப்போரூர் கிதம்பர சுவாமிகள். சிவனடியில் கலந்தவர்கள் ஐயடிகள் காடவர்கோன், கண்ணப்ப நாயனர், கலிய நாயனார், மூர்க்க நாயனுர், சிவநேச செட்டியார், பூம்பாவை, பூசலார், வாயிவார், திருக்குறிப்புத் தொண்டர் முதலியோர். பரசமய வாதம் புரிந்து வெற்றி கண்டவர்கள் இராமலிங்க சுவாமிகள், அப்பய்ய தீட்சிதர், சிவப்பிரகாசர், முதலியோர் ஆவர். (76)