பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/711

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்றில் பருவம் 629 இவ்வாறு இறைவர் அசரீரியர்கக் கனவில் சொன்னதைக் கயிலாயநாதர் வடமொழிக் கல்வெட்டும் அறிவிக்கின்றது. கழற்சிங்க நாயனர் புராணத்துள், காடவர் குரிசி லாராம் கழற்பெருஞ் சிங்க ளுர்தாம் ஆடக மேருவில்லார் அருளினால் அமரில் சென்று கூடலர் முனைகள்சாய வடபுலம் கவர்ந்து கொண்டு நாடற நெறியில் ஏகநன்னெறி வளர்க்கும் நாளில் என்ற பாடல் காணப்படுகிறது. இதில் கழல்சிங்க நாயனர் வடபுலம் சென்று மன்னர் களுடன் போர் புரிந்து வெற்றி கண்டார் என்ற குறிப்புக் காணப்படுகிறது. இச்செய்தி வேலூர்ப் பட்டயத்தால் அறிகிருேம். நாட்டினை அறநெறியில் வைக நன்னெறி வளர்த்தான் என்பதும் அப்பட்டயத்தால் அறியும் செய்தி யாகும். இம்மன்னன் இறைவன் உறைவிடங்களாகிய பல திருக் கோயில்களுக்குத் திருத்தொண்டு புரிந்தவன் என்பதைச் சேக்கிழார், 'குவலயத்தரஞர் மேவும் கோயில்கள் பலவும் சென்று, தலைவரும் அன்பில் தாழ்ந்து தக்க மெய்த்தொண்டு செய்வார்' என்று குறிப்பிட்டுள்ளனர். இச்செய்தி திரு வொற்றியூர், திருவதிகை, திருவிடைமருதூர்க் கல்வெட்டுக் களாலும், வேலூர்ப் பட்டயத்தாலும் உணரலாம். இவனுக்கு உரிமை மாதர் சிலர் இருந்தனராகச் சேக்கிழார் குறிப்பிடுகின்றனர். இதனே, விரைசெறி மலர்மென் கூந்தல் உரிமைமெல் இயலார் தம்முள் உரைசிறந் துயர்ந்த பட்ட்த் தொருதணித் தேவி என்று பாடியுள்ள இடத்துக் காண்க. இவன் உரிமை மாதர் சிலரை உடையவன் என்பதை இரட்ட அரசனை அமோகவர்வு நிருபதுங்கன் மகளான சங்கா என்பவளை மணந்திருந்ததலுைம், மாறன் பாவை