பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/730

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

648 சிற்றில் பருவம் வகையாகிலும் ஏற்படும்', என்று கூறுவதே, பொன்னம் சிலம்பு*உய்வாரே' என்ற அடிகளின் அ ைம ந் த கருத்தாகும். சிலம்பு பெண்கள் அணியும் அணிகலமே என்ருலும், ஆண் மகவின் குழந்தைப் பருவத்தில் பெற்ருேர்கள் சிலம்பை அணிந்து மகிழ்தலும் உண்டு. இந்த உண்மை யினைப் பரஞ்சோதி முனிவர் தமது திருவிளையாடற் புரா ணத்துள், மாமனக வந்து வழக்குரைத்த படலத்துள், ஐம்படை மார்பில் காணேன் சிறுசிலம்பு அடியில் காணேன் மொய்ம்பிடை மதாணி காணேன் முகத்தசை சுட்டி காணேன் மின்படு குழைகள் காணேன் வெற்றுடல் கண்டேன். அப்பா என் பெறும் என்று பிள்ளைப் பணிகளும் கவர்ந்தார் என்ன என்று குறிப்பிடுதல் காண்க. பாட்டின் ஈற்றில் நீர் வளச் சிறப்பையும் வராலின் வளத்தையும் குறிப்பிட்டுள்ளார். கடா என்பது யானையின் மத நீர். அந்நீரும் குள நீரும் கலந்து வெள்ளமாக ஒட, அவ்வோட்டத்தில் வரால் துள்ளி, மேல் எழுந்து தென்னம் பழத்தை மோத, அத் தென்னம்பழம் கீழே வீழ்கையில் பலாவில் பட்டு அப்பலாப்பழம் உதிருமாம். இந்த அளவுக்குத் தொண்டைநாடு வரால் மீன்கள் அட்டகாசம் செய்யும் நிலையில் நீர் வளத்தைப் பெற்றது என்பர் திரு. பிள்ளை அவர்கள். இதுபோன்ற வர்ணனை நிறைந்த பாடல் சீவகசிந் தாமணியில் காணப்படுகிறது. காய்மாண்ட தெங்கின் பழம்வீழக் கமுகின நெற்றிப் பூமாண்ட தீந்தேன் தொடைகீறி வருக்கை போழ்ந்து தேமாங் கனிசிதறி வாழைப் பழங்கள் சிந்தும் ஏமாங் கதமென்னும் இசையால் திசைபோய துண்டே என்பது அப்பாடல், (79)