பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/731

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. மாறு படுமன் னவர்எனினும் வளவன் கழல்கால் தொழின் அவர்வாழ் மணிமா ளிகைகள் மிக்குயரு மாறு விடுப்பாய் மறையோர்முன் கூறு படுநம் பரன் அடியார் குறிப்புள் உணர்ந்து நெடுவானும் குறுக நிமிர்மா டங்கள் பல குயிற்றிக் கொடுத்துக் குடிஅமைப்பாய் வேறு படுமா றியாம் வகுத்த வீட்டை விடுத்துச் செலின் வரல்என் வேழக் கரும்பின் சாருேடி விரிந்த கரம்பும் பாய்ந்துகுழை சேறு படுதண் டகநாடா சிறியேம் சிற்றில் சிதையேலே செல்வம் செருக்கு குன்றை அருள் செல்வா சிற்றில் சிதையேலே (அ. சொ.) வேழக் கரும்பு-வேழமாகிய கரும்பு, கரம்பு-கரம்பு நிலம், விளைவு செய்யாத நிலம், குழைகுழைந்து, வளவன்-சோழன், கழல்கால்-வீரத் தண்டை அணிந்த பாதங்கள், மணி-அழகிய, மறையோர்-வேதங்களை ஒதும் பிராம்மணர், குயிற்றிஅமைத்து, வரல்-வருதல், மாறுபடும்-பகைமை கொண்ட, முன்கூறுபடுதல்-முதன்மை யானவராய்க் கூறப்படும், குறிப்பு-மனக் கருத்து, என். உனக்கு வரும் நஷ்டம் என்ன? விளக்கம்: அரசர்கள் தம்மைத் தொழுது வழிபடும் பகை மன்னர்களுக்குத் தண்டனை நீக்கி அருளுவர் என்பது 'வந்தடி பொருத்தி முந்தை நிற்பின், தண்டமும் தணிதி நீ' என்று புறநானூறு கூறுதலால் அறிகிருேம். இதுபோன்ற கருத்தே முதற்கண் காணப்படுவது. சேக்கிழார் தலைமை அமைச்சராய் இருந்தமையின், பகை மன்னர்களும் உயர்ந்த