பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/741

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. சிறுபறைப் பருவம்


I.

ஆயபர சமயக் கருங்கடா யானைக்
கரிக்குருளை வாய்முழக்கும்
அரும்புகழ்ச் சைவப் பசும்பயிர்க் குலகு சூழ்
ஆழியுள் புயல்முழக்கும்
பாயமிடி யாளருக் களவில்பொன் செறிசெய்த
பண்டார வாய்திறந்து
பலவும் கவர்ந்திடுமின் எனல்தெரித் திடுகொடைப்
பயன்முரசின் எழுமுழக்கும்
நேயமிகு வளவர்பெரு மாற்காக அப்பாரில்
நேர்ந்ததன் படைஎழுப்பும்
நிலாம்பணை முழக்குமா கக்குணில் மலர்க்கைகொடு
நிகழ்பால் வளன்உணர்த்து
தேயமுழு தும்பரவு துண்டீர வளநாட்
சிறுபறை முழக்கியருளே
தென்றலங் கன்றுலவு மன்றஒண் குன்றைமுனி
சிறுபறை முழக்கியருளே

(அ.சொ) பரசமயம்-பிற மதங்களாகிய, கடா-மதசலம் பொழியும், அரிக்குருளை - சிங்கக்குட்டி, பசும்பயிர் - அழகிய பயிர், ஆழி - கடலின் நீரை, உண்-பருகும், புயல் - மேகம் மிடியாளருக்கு - வறுமையாளருக்கு, செறி செய்த - திரட்டி வைத்த, பண்டாரம் - கருவூலம், பொக்கிஷம், முரசவாத்தியம் போல, எழு-எழும், முரசின்- வளவர் - சோழர்க்கு, நேர்ந்த - பொருந்திய, படை- ஆகவப் பார்-போர்க்களம் சேனை, நிலாம் - நிலைத்திருக்கும். பணை-முரசு. குணில்- பறையை அடிக்கும் சிறு கோல், நிகழ்-இடையறாது செல்லும்