பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/744

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

662 சிறுபறைப் பருவம் எல்லோராலும் செல்வாக்கும் பெருமதிப்பும் பெற்றது” என்பதும், 'சைவ சித்தாந்த கொள்கை போன்ற கருத்தும் உண் மையும், வழிபாட்டு ஒழுங்கும் அமைந்த சமயம் எதுவும் இல்லை. சைவ சித்தாந்தக் கொள்கை மிகப்பழம் பெருங் கொள்கை. சைவ சமயமே பிரசமயங்களுக்கு வழிகாட்டியாக உளது. தமிழர் சமயம் இதுவே, மற்றைய சமயங்கள் இதற்கு வேருனவை. மேலும், அண்மையில் தோன்றியவை, தென்னிந்தியாவில் சமய உணர்வையும் உண்மை வாழ் வ்ையும் வெளியிடும் ஆற்றல் கொண்டு இது சிறந்து விளங்கு கிறது” என்பதும் ஆகும், இத்தகைய புகழ்க்குரிய சைவமாம் பயிர்வளரச் சேக் கிழார் தமது கவியாம் புயலால் வளர்த்தலின், புயல் முழக்கம் என்றனர். கடல் ஆழம் உடைத்தாதல் பற்றி ஆழி ஆயிற்று. அது மூன்று பக்கங்களிலும் உலகை வளைத்துக் கொண்டிருந் தலின், உலகு சூழ் ஆழி என்றனர். ஆழி நீரை புயல் உண்ணு தலாவது பருகுதல். இவ்வாறு பருகுதலை உண்ணுதல் என்றது மரபு. வழு அமைதி. முல்லைப்பாட்டும் 'பாடிமிழ் பனிக் கடல் பருகி” என்றதையும் காணக. பாண்டாரம் என்பது பொக்கிஷசாலையாகும். இறைவன் எல்லா நிதிகட்கும் இருப்பிடமானவன். ஆகவே, அவன்மூல பண்டாரம் எனப் படுகிருன். இதனை மணிமொழியார், காலம் உண் டாகவே காதல்செய் துய்மின் கருதரிய ஞாலமுண் டாைெடு நான்முகன் வானவர் நண்ணரிய ஆலமுண் டான் எங்கள் பாண்டிப் பிளான்தன் அடியவர்க்கு மூலபண் டாரம் வழங்குகின் ருன்வந்து முந்துமினே என்று மொழிந்திருப்பதையும் ஈண்டு நினைவு கூர்க. முரசம் என்பது ஒருவகைத் தோல்கருவி. இதனை யானை மேல் ஏற்றி அறைந்து ஒலி எழுப் பி நகர்க்குச் செய்தி அறிவித்து வருதல் அரசமுறை.