பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/746

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

664 சிறுபறைப் பருவம் தெம்முனை சாயச் சமர்விளை யாடிச் செங்கள வேள்விசெயும் திறள்முர செனஇமை யவர்விழ வயரச் செழுநகர் வீதிதொறும் மும்முர சமும்அதிர் காவிரி நாடன் முழுக்குக சிறுபறையே முத்தமிழ் பயில்பரு திப்பதி முருகன் முழக்குக சிறுபறையே என்று பாடி இருத்தலைக் காண்க. குணில் என்பது சிறுகுறுந்தடி. இதல்ை பறை அடிக்கப்படும். குனில், அடிக்கும் கருவியாகப் பயன் பட்டதைச் சிலப்பதிகாரம், கன்று குனிலாக் கனிஉகுத்த மாஅயவன் இன்றுநம் மானுள் வருமேல் அவன்வாயில் கொன்றையம் தீங்குழல் கேளாமோ தோழி என்று அறிவித்தல் காண்க. துண்டிர நாடு என்பது தொண்டை நன்னடு. துண்டீரன் என்பவனல் ஆளப்பட்டமையின் இது துண்டிர நாடு என்ற பெயர் பெற்றது. பின்னர் தண்டகன் என்பவனுல் ஆளப் பட்டமையின் தண்டகன் நாடாயிற்று. அதன்பின் ஆதொண்டனல் ஆளப்பட்டமையின் தொண்ட நாடா யிற்று. இந்த முறை வைப்பினை இராமலிங்க அடிகளார், அல்லது உம் சேரன்மண்டலம்-சேரமண்டலம், சோழன் மண்டலம்-சோழ மண்டலம் என்பன போல், இம்மண்டலத் திற்கு, முன்னர் துண்டீரனல் ஆளப்பட்டமையின் துண்டீ ரன் மண்டலம், துண்டிர மண்டலம், துண்டிரன்புரம், துண்டீர புரம் என்றும், பின்னர்த் தண்டகனல் ஆளப்பட்ட மையின் தண்டகன் நாடு, தண்டக நாடு, தண்டகன் புரம் தண்டகபுரம் என்று பெயர் வழங்கின; அவைபோல், அதன் பின்னர் ஆதொண்டனல் ஆளப்பட்டமையால் ஆதொண் டன் மண்டலம், ஆதொண்ட மண்டலம் தொண்டன் மண் டலம் தொண்ட மண்டலம் என்றே மரபு வழுவாமை