பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/748

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

666 சிறுபறைப் பருவம் ஏயு மாறுபல் உயிர்களுத் கெல்லையில் கருணைத் தாய னாள்தனி ஆயின தலைவரைத் தழுவ ஆயு நான்மறை போற்ற நின் றருந்தவம் புரியத் து.ாய மாதவம் செய்தது தொண்டைநன் நாடு நன்மை நீடிய நடுநிலை ஒழுக்கத்து நயந்த தன்மை மேலிய தலைமைசால் பெருங்குடி தழைப்ப வன்மை ஒங்கெயில் வளம்பதி பயின்றது வரம்பின் தொன்மைமேன்மையில் நிகழ்பெருந்தொண்டைநன்நாடு கறைவி ளங்கிய கண்டர்பால் காதல்செய் முறைமை சிறைபு ரிந்திட நேரிழை அறம்புரிந் ததனால் பிறையு றிஞ்செயில் பதிபயில் பெருந்தொண்டை நாடு முறைமை யாம் என உலகினில் மிகுமொழி உடைத்தால் என்ற பாடல்களில் புலப்படுத்திக் உள்ளனர். நாட்டுக்கு அழகு மன்றங்கனேப் பெற்றிருப்பது. கம்பரும் தமது நூலில் மண்டபம் பல இருந்ததை, மன்னவர் தருதிறை அளக்கும் மண்டபம் அன்னமென் நடையவர் ஆடும் மண்டபம் உன்னரும் அருமறை ஒதும் மண்டபம் பன்னரும் கலைதெரி பட்டி மண்டபம் எனக் குறிப்பிட்டுள்ளனர். "பட்டி மண்டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்' என மணிமேகலையிலும் "பகைப்புறத்துக் கொடுத்த பட்டி மண்டபமும்' எனச் சிலம்பும் 'பட்டி மண்டபம் ஏற்றின’’ என வாசகத்தும் வருதல் காண்க. ஈண்டுப் பிள்ளை அவர்கள் மன்றத்தினேச்சுட்டினர். அம்மன்றம் நன்கு பரந்த ஒளியுடன் தென்றலங் குழவி மெல்லென உலவும் முறையில் இருந்த மையின் 'தென்றலங் கன்று உலவும் மன்றம்' என்றனர். பரந்த மாநிழல் இடங்களும் மன்றமாகக கருதப்பட்டன. இதனை மன்று என திரு முருகாற்றுப் படையில் வரும் சொல்லுக்கு 'ஊருக்கு நடுவாய் எல்லாரும் இருக்கும் மரத்தடி' என்று நச்சினர்க் கினியர் பொருள் கூறி இருத்தலைக் கொண்டு தெளிக. (82)