பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/756

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

674 சிறுபறைப் பருவம் பாலாறு ஆழமுடையது. அதற்கேற்ப நீருடையது: அதனல் அலே மிக்க எழக்கூடியது, அங்ஙனம் எழுந்த அலை கற்பக நாடு அளவு எழுந்து, அங்குள்ள கற்பகத் தருவை முட்டியதாம். அங்ஙனம் முட்டுண்ட கற்பகத் தரு தன் அடியில் இருந்த காமதேனுவை நோக்கி, “நீ நந்தி மலையில் தவம் கிடந்தபோது வசிட்டர் ஏவிய கன்றிற்குப் பால் சுரந்தமையால் அன்ருே இப்பாலாறு உண்டாகியது. அந்தப் பாலாறு இப்போது என்னே வந்து மோதுகிறது. ஆகவே, நீதான் காரணம்' என்று கூறியதாகக் கவி அழகு படப் பாலாற்றின் வளத்தினைக் கூறினர். (84) 4. ஆன்றசிவ புண்ணிய முழக்கமும் பற்பலவர் ஆயஅடி யவர்தம்வரலா முகிய சரித்திர முழக்கமும் தெய்வமணம் அகலாத தமிழ்முழக்கும் என்ற பல அரமுழக் கமும்இணை இலாதசய இனியதிரு அருள் முழக்கும் எய்துதற் கவிதாம் சிவானு போகப்பேர் இரும்பெரும் முழக்கும் ஆன மான்றபைங் கமுகம் பொழில்தலைத் தவிர்செய்ய மதுவநிறை தேத்தட்ைக்கண் வான் பிறைக் கோடுதற் கவர்இனன் எனக்க்ள வாவிகுளம் ஓட்ைஎங்கும் தேன் தவழ, அதுவிழும் துண்டிர வளநாட சிறுபறை முழக்கியருளே தென்றலங் கன்றுலவு மன்றஒண் குன்றைமுனி சிறுபறை முழக்கியருளே. (அ. செ.) ஆன்ற - நிறைந்த, சிவபுண்ணியம்-சிவன் மகிழச் செய்த நற்செயல்கள், திருவருள் முழக்கு-இ ைவன் கிருபை இருந்தவாறு என்னே என்று வியந்து முழக்கும். முழக்கம்-சிவானுபோகம் சிவனுடன் இரண்டறக் கலக்கும்