பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரிசிரபுரம் மகா வித்துவான் மீனுட்சி சுந்தரம் பிள்ளை அவர்களின் வரலாறு திரிசிரபுரம் மகாவித்துவான் மீளுட்சி சுந்தரம் பிள்ளே அவர்கள், கணக்காயர் சிதம்பரம் பிள்ளை அவர்கட்கும் அன்னத்தாச்சியார் என்னும் அம்மையார்க்கும் அரும்பெரும் பிள்ளையாக 1815-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6-ஆம் நாள் திரிசிரபுரம் சில்லாவைச் சார்ந்த அதவத்துாரில் பிறந்தனர் இவர் சைவ வேளாள மரபினர். திரு பிள்ளை அவர்கள் திருவாவடுதுறையைச் சார்ந்த பூரீ வேலாயுத முனிவரிடம் சமயநூல்களையும், இலக்கிய நூல்களையும் கற்றறிந்தார். இவர் தமது பதிருைவது ஆண்டில் காவேரி ஆச்சியாரை மணந்து இல்லறம் ஏற்றனர்; இவருக்குக் கல்வியில் இருந்த ஆர்வத்தால் பல அறிவு சான்ற பேரறிஞர்களேயும் அடுத்துப் பல நூல்களைப் பயின்றனர். இவர் தெருத்தெருவாகப் பிச்சை வாங்கி உண்டு வந்த ஒரு பரதேசியிடம் தண்டி அலங்காரம் என்னும் அணி இலக்கண நூலைப் பயின்ருர் என்ருல், இவருக்கு இருந்த கல்வி பயிலும் ஆர்வத்தை என் என்பது! திரு. பிள்ளை அவர்கள் திருவாவடுதுறை ஆதீனத்தை அடைந்தனர். அங்கிருந்தபோது, திருமடத்தைச் சார்ந்த பூ அம்பலவாண முனிவரிடம் பல சமயசாத்திர நூல்களைப் பயின்றனர். 'தாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக' என்ற நல்லெண்ணத்துடன் ஆவ்வாதினத்தில் பல மாணவர் கட்குப் பாடம் சொல்லி வந்தனர். திரு. பிள்ளை அவர்கள் துறைசை ஆதீனத்தில் இருந்தபோது, திருவெண்ணிற்றுமை பிள்னைத்தமிழ், சீகாழிக் கோவை, திருத்தில்லை யமக