பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/796

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

of 14 சிறுபறைப் பருவம் சேக்கிழாரது பாடல்கள் எவர்க்கும் பெட்பும் விருப்பும் தருவன என்பதைஅறியாதவர் யார்? இவரது கவியினிடத்துப் பெட்கும் விருப்பம் இருந்ததைக்கூட உமாபதி சிவனர். மருவுதிரு முறைசேர்ப்பார் எழுதுவார் இருந்து வாசிப்பார் பொருளுரைப்பார் கேட்டிருப்பார் மகிழ்ந்து சிரமசைத்துக் கொண்டாடிக் குதுகலிப்பார் சிரிப்பர்ர் தேனிப்பார் குன்றைமுனி சேக்கிழார் செய்த அரியதவத் தினை நினைப்பார் அம்பலவர் முன்னுள் அடிஎடுத்துக் கொடுக்கஇவர் பாடினர்என் றுரைப்பார் பெரியபுரா னங்கேட்ட வளவர்பிரான் செவிக்குப் பிடிக்குமோ இனிச்சிந்தா மணிப்புரட்டென் றுரைப்பார் என்று அறிவிக்குமாற்ருல் அறியலாம். தமிழ் மொழியினே, 'முந்து' என்று அடை கொடுத்துக் கூறிய திரு. பிள்ளை அவர்களின் நுண்ணறிவைப் பாராட் டாமல் இருக்க இயலாது. தெய்வங்கட்கு எல்லாம் முன் இருப்பது தமிழ் என்ற கருத்தில்தான் திரு பிள்ளை அவர்கள் இவ்வடைச் சிறப்பை இயைத்துள்ளனர். இதனே எடுத்துக் காட்டுடன் எடுத்துக்காட்டின், முந்து தமிழ் என்ற தொடரின் பொருட் சிறப்பு நன்கு விளங்கும். இடைக்காடர் என்னும் புலவரைக் குலேச பாண்டியன் தனக்கு இருந்த இலக்கண இலக்கிய அறிவுச் செருக்கால் மதித்திலன். அவன் அவரது பாடலையும் பொருட்படுத் திலன். இதனுல் மனம் உளைந்த இடைக்காடர் ஆலேவாய்ச் சுந்தரேசப் பெருமானக் கண்டு வணங்கி, சந்நிதியில் வீழ்ந்தெழுந்து தமிழ்அறியும் பெருமானே தன்னைச் சார்ந்தோர் நன்னிதியே திருவால வாயுடைய நாயகனே நகுதார் வேம்பன் பொன் நிதிபோல் அளவிறந்த கல்வியும்மிக் குளனென்று புகலக் கேட்டுச் சொன்னிறையும் கவிதொடுத்தேன் அவமதித்தான் சிறிதும்முடித் துளக்கா னகி