பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/799

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுபறைப் பருவம் 717 நல்க-எடுத்துக் கொடுக்க, ஞெகிழியின் ஒலி-சிலம்பின் ஒலி, பொற்ப-அழகுற, முங்கு-மூழ்கும், அஞ்செவி என்பது அகம் செவி என்று பிரிக்கப்படும் போதுதான் உள்செவி என்று பொருள்படும். 'அஞ்சிறைதும்பி” என்ற தொடரையும் காண்க. 'அகம் முனர் செவிவரின் இடையனகெடும்” என்பது விதி. விளக்கம்: இறைவராம் நடராசப் பெருமான், மன்னன் முதல் மற்றைய யாவரும் கேட்க, 'நாம் முதல் எடுத்துக் கொடுக்கச் சேக்கிழார் அடியவர் வரலாற்றைப் பாடி யுள்ளனர். அதனைக் கேட்பீராக” என்று அசரீரியாகச் சொன்னர் என்பது தொண்டர் புராண வரலாறு கூறும் உண்மை. இதனை அப்புராணத்துள், சேக்கிழான் நமதுதொண்டர் சீர்பரவ நாம்மகிழ்ந் துலகம் என்றுநம் வாக்கி ஞல் அடி எடுத்து ரைத்திட வரைந்து நூல்செய்து முடித்தனன் காக்கும் வேல்வளவ நீஇதைக் கடிது கேள் எனக் ககன வெளியிலே ஊக்க மானதிரு வாக்கெ குழந்தது திருச்சி லம்பொலியும் உடன்எழ என்றுவரும் பாடலால் அறியலாம். இக்குறிப்பே இப்பாட்டில் முதல் பகுதியில் காணப்படுவது. சேக்கிழார் அடியார் வரலாற்றை முழுக்கப் பாடினர் என்பதைக் காப்புப் பருவத்தில் நன்கு விளக்கப் பட்டுள்ளது. ஆண்டுக் காண்க. இறைவனே நமது சேக்கிழாரை, “எங்கும் அளாம்புகழ் இச்சேவையர்கோன்” என்று புகழ்ந்து கூறும் பெருமை பினேப் பெற்றனர் என்ருல், அவர்தம் பெருமையினே எங்ங்ணம் எடுத்து இயம்புவது? இறைவன் திருவாக்குச் சிலம்பொலியுடன் கேட்டது என்பது புராணத்தும், பிள்ளைத் தமிழினுள்ளும் இருத்தலே ஒர்க. இதஞ்ல் கருத்து ஒற்றுமை கவினுறத் தெரிகிறது. 'வெகுளில் மெய்ம்மொழி வான்