பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை víí பெரும் தெய்வப்புலவராம் சேக்கிழார் பெருமானரின் மாபெரும் புலமையும், அரும்பெரும் மாட்சியும் இதன்கண் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. சேக்கிழாரது கவிகளின் பொருட்செறிவு, நயம், அழகு, மாண்பு, சிறப்பு ஏனய கவிகளில் காண இயலாது என்ற அளவுக்கு அவரது நூலிலிருந்தே சான்றுகள் காட்டப்பட்டுள்ளன. சேக் கிழார் பெருமாளுர் தொல்காப்பியம், சங்க நூற்கள், சித்தாந்த சாத் தி ரங் க ள், சைவத் திருமுறைகள் ஆகியவற்றில் நன்கு பயின்றிருந்த பயிற்சிகளே அவரது பாடல்களைக் கொண்டே நன்கு நிறுவியுள்ளேன். இவைகளே அன்றி, இப்பெருவிளக்க உரையில் சைவ சித்தாந்த பதி பசு பாச விளக்கம், தீட்சாவிதிகள், தமிழின் மாண்பு, கூத்தப் பெருமாளுர் கூத்தின் ஒப்புயர்வில்லாச் சிறப்பு, வரலாற்று உண்மைகள், திருமுறைச் சிறப்பு, சைவ சமயச் சிறப்பு, அமைச்சர் இயல்பு, தமிழர் நாகரிகம், தமிழ் வேந்தர்களின் இமயப் படை எடுப்பு, அகப்பொருள், புறப் பொருள் விளக்கம், சீர்திருத்தக் கருத்துக்கள் முதலான மற்றும் பல அரிய குறிப்புக்களும் வரையப்பட்டுள்ளன. இன்னேரன்ன காரணங்களால்தான் இவ்வுரைநூல் பல பக்கங்களுடன் பெருநூலாகத் திகழ்கிறது. இவ்வுரை வி ள க் க த் தி ல் பிள்ளைத் தமிழ்பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்று திகழ்கிறது. இதன் மூலம் தொல்காப்பியர் காலத்துக்கு முன்னும், அவர் காலத்தும், சங்ககாலத்தும், அதற்குப் பிற்பட்ட காலத்தும் பிள்ளைத் தமிழ் நூலுக்குரிய கரு உண்டு என்பதையும், பின்னல் எங்ங்ணம் பிள்ளைத் தமிழ் நூல்கள் பெருகலாயின என்பதையும், பிள்ளைத் தமிழ் பாடுதற்குரிய இலக்கணங் களேயும் அறிந்து கொள்ளலாம். இக்காலத்தில் தமிழ் ஆராய்ச்சித்துறையில் பட்டம் பெற அவாவும் மாணவர் கட்கு இதுபெருந்துணை செய்யும் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்.ை இதன்பின் சேக்கிழார் பிள்ளைத் தமிழைப் பற்றிய அமைப்பு முறையும், பாடல்களைப்பற்றிய கருத்துச் ருக்கமும், சேக்கிழார் வரலாறும் காலமும் பற்றிய