பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/801

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுபறைப் பருவம் * 19 என்று பரஞ்சோதியார் அறைகூவி இப்பாடலைப் பாடி அமைத்திருப்பது, தமிழ் அருள் முங்கு தமிழ் என்ற காரணத் தால்தான். '’பாலேநெய்தல் பாடியதும் பாம்பொழியப் பாடியதும் காலனே அன் றேவிக் காரம்கொண்ட-பாலன் மரணம் தவிர்த்ததுவும் மற்றவர்க்கு நந்தம் கரணம்போல் அல்லாமை காண்' என்று திருக்களிற்றுப் படியார் கூறுவதன் குறிப்பும், அணங்கமர் யாழ்முரித் தாண்பனை - பெண்பனை ஆக்கிஅமண் கணங்கழு ஏற்றிக் கடுவிடம் தீர்த்துக் கதவடைத்துப் பிணங்கலை நீர் எதிர் ஒடம் செலுத்தின வெண்பிறையோ டிணங்கிய மாடச் சிரபுரத் தான்தன் இருந்தமிழே என்று நம்பியாண்டார் நம்பிகள் பாடியதன் குறிப்பும் தமிழ் அருள் முங்கு தமிழ் என்ற கருத்தில் என்க. வானும் புகழ்புகலி மன்னன் தொடர்பொன்று தேனுந் திதழியோன் சீர்ஏடு-தானும் கரியாய் மொழியும் கரியாய் விடாமல் எரியார் அழல்வீழ்ந் தெழுந்து என்று சிவப்பிர்காச சுவாமிகள் கூறியுள்ளதன் குறிப்பும், தமிழ் 'அருள் முங்கு தமிழ்' என்பதை விளக்கவே என்க. (91)