பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/820

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

738 சிறுதேர்ப் பருவம் மலர் ஆத்தி ஆயிற்று. இதனையே, "தாதகித் தொடை யலான்” என்று ஈண்டுக் கூறப்பட்டது. சேக்கிழார் அனபாயச் சோழன் கவரி வீசப்பெற்ற நிலை உற்றனர் என்பது அவரது வரலாற்றில் அறிகிருேம். 'அரசனும்கூட ஏறி முறைமையில்ை இணைக் கவரி துணைக் கரத்தால் வீச” என்று சேக்கிழார் புராணத்து வருதல் காண்க. புலவர்கட்கு மன்னர்கள் கவரியோ சிவிறியோ வீசிக் காற்றை எழுப்பி அவர்களைக் குளிர்வித்தல் தொன்று தொட்ட வழக்கமே ஆகும். இதனை நமது புறநாற்றைக் கொண்டும் நிறுவலாம். மோசிகீரனர் என்பவர் ஒரு புலவர். சேரமான், தகடுர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையைக் காணச் சென்ருர் அப்போது அவன் அரண்மனையில் இல்லை. புலவர் நிெடுத் தொலைவிலிருந்து வந்த இளைப்பால், முரசு என்னும் அரசாங்க வாத்தியம் வைக்கப்படும் கட்டிலில் ஏறிப் படுத்து உறங்கிவிட்டார். அப்போது முரசம் நீராடிப் பூசை பெற்று வர வெளியே சென்றுளது. அம்முரசு கட்டில் தெய்வம்போல் கருதப்படும் முரசு வைக்கப்படும் சீரிய இருக்கையாகும். மெத்தென்று அமைக்கப்பட்டதாகும். அதன் மீது எவர் ஏறினும் கொலேக் குற்றத்திற்கு ஆளாவார். இவ்வளவு சட்ட திட்டங்களோடு கூடிய முரசு கட்டிலில் புலவர் ஏறி நன்கு உறங்குவாராயினர். வெளியே சென்ற அரசன் அரண் மனக்குள் வந்தனன். முரசு கட்டிலில் படுத்துறங்கும் புலவரைக் கண்டனன். வேறு எவரேனும் அங்குப் படுத் திருந்திருப்பரேல், அவரை தனது வாளால் இரு கூறு படுத்தி இருப்பன். ஆனால், யாது செய்தனன்? புலவர் உறங்கி எழுந்துணையும் சிவிறி கொண்டு வீசலானன். துயில் உணர்ந்து எழுந்த புலவர் இதனைப் பாராட்டி ஒரு செய்யுளைப் பாடினர். அதுவே,