பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/827

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுதேர்ப் பருவம் 745 நீர் வளத்தால் நிலவளத்தையும், நிலவளத்தால் குடி வளத்தையும், குடிவளத்தால் கோன் வளத்தையும் பெருக் கும் செல்வச் சிறப்பு சேவையராம் வேளாளப் பெருந்தகை யார்கட்கு இருத்தலின், 'ஊருணி நிகர்த்த திருவப் பெருக் கினமை சேவையர்' என்றனர். (94) 4. வசைதவிர் வினைத்திட்பம் வாய்ந்தாக வப்பாரின் மாற்றலர் எதிர்ந்த காலை மழைமதக் களியான வரம்பரி சயந்தனம்முன் மற்றுள வரூதி னியெலாம் அசைவில்பல் படைக்கலம் கொடுநூழில் ஆட்டுபுயல் ஆரு எழுந்த நெய்த்தோர் அவ்வணிக அழன் இழுத் தோடிஉவர் ஆழிபுக் களவில்திடர் செய்ய நோக்கி இசைமலர் அலங்கலெடு வாகையும் சூடியார் எய்தப் புனைந்த பெருமான் இரும்புலியை மேருமுடி ஏற்றிப் பெருந்தேர் இனங்குற உருட்டி நேமி திசைதிசை உருட்டச் சேவையர் குலாதிபன் சிறுதேர் உருட்டி யருளே சிறுகோல் எடுத்தரசு செங்கோல் நிறுத்தினுேன் சிறுதேர் உருட்டி யருளே (அ.செள.) வகை-குற்றம், தவிர்-நீங்கிய, வினைத் திட்பம்-மன உறுதி, ஆகவப்பார்-போர்க்களம், ஆகவம்போர், மாற்றலர்-எதிரிகள், காலை-பொழுது, வாம்பரிதாவும் குதிரை, சயந்தனம்-தேர், வருதினி-சேனை, அசைவுசோர்வு, தப்புதல்-மடிதல், கெடுதல், படைக்கலம்-ஆயுதம், நூழில் ஆட்டுபு-கொன்று குவித்தபோது, அணிக அழன்-சேனை யாகிய பிணம், அணிகம்-சேனை, நெய்த்தோர்-இரத்தம், உவர் ஆழி-உப்புக்கடல், திடர்-மேடு, இசை-புகழ், அலங்கல்