பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு அ மீனுட்சி சுந்தரம் பிள்ளை வரலாறு தந்தையே தந்தைஉனைத் தான்படிக்க வைத்தவனே தமிழுக் காசான் சுந்தரமா மதிவதன மீனுட்சி சுந்தரனே துலங்கு மாலே -அட்டாவதானம் வேலாயுதக் கவிராயர் மலையமுனி தவப்பேருே கலைமகளின் தவப்பேருே மறிநீர் வைப்பில் தலைமைபெறும் இவன்சனனம் எனப்பலபிள் ளைத்தமிழைச் சாற்றும் வல்லோன் குலேவில்புகழ் மீட்ைசி சுந்தரநா வலர்ஏறு குடந்தை மேய மலைமகள்மேல் ஒருபிள்ளைத் தமிழ்உரைத்த தொருவியப்போ மதிமிக் கீரே --சின்னசாமிப் பிள்ளை இப்புவிசெய் தவந்தானே தந்தைதாய் செய்தவமோ இசைத்த ஆசான் செப்பமுடன் செய்தவமோ மீளுட்சி சுந்தரவேள் செனனம் ஆகி ஒப்பிலுயர் கல்வியும்சற் குணமும் நிறைந் தகிலாம்மை உபய பாத வைப்பிலன்பால் இனியபிள்ளைத் தமிழ் உரைத்தான் புலவரெலாம் மகிழத் தானே -திரிசிரபுரம் வீரராகவ செட்டியார் இத்தகைய பேரறிவுப் பெருங் கடலாக விளங்கிய திரு. பிள்ளை அவர்கள், 1816-ஆம் ஆண்டு, பிப்பிரவரித் திங்கள் தமது 61-ஆம் ஆண்டு அம்மை அப்பனது அடிமலர் இணைகளில் இ ன ந் து இன்புறலாயினர். திரு பிள்ளை அவர்களின் முழுவரலாற்றைக் காணவிழைவார் இவரது மாணவரான மகாமகோ பாத்தியாய டாக்டர் உ. வே. சுவாமிநாதய்யர் எழுதியுள்ள விரிவான நூலில் கண்டு தெளியலாம்.