பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/851

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுதேர்ப் பருவம் 769 செயா-செய்து, வெதும்ப-வருந்த, நண்ணு-கூடி, அரம் பையர்-தேவமாதர் அடங்கவும்-முழுவதும். விளக்கம்: இறைவன் மேருவினை வில்லாகக் கொண்ட வன் ஆதலின், குன்றவார் சிலைப் பெருமான் என்றனர். பொருப்பு வில்லார் கையினர், 'குன்றம் வில்லா' என்று திருமுறைகளில் வரும் தொடரைக் காண்க. இறைவர் மேருவினை வில்லாகவளைத்துக்கொண்டது குறித்துப் பல விதக் கற்பனைகள் புலவர்கள் உள்ளத்தில் உதித்தன. அப்பர் இறைவர் மேருவினை வில்லாக, வளைத்த நிகசிழ்ச்சி யினை உளத்தில் கொண்டும், இறைவர் இடப்பாகத்தில் உமை இருப்பதையும் மனத்தில் கொண்டும், இறைவா நீமலையாம் வில்லை வளைத்து இடக்கையில் பிடித்து, அக் கையை முன் நீட்டி நிறுத்தி, வலக்கையில் அம்பைப்பிடித்து நானே இழுக்கும் போது பின் நிறுத்தி, முப்புரம் எரிக்கச் சென்றன இடக்கை உமா தேவின் கையன் ருே? வலக்கை உன்னுடைய தன்ருே? இந்நிலையில் முன் நிற்பது உமா தேவியின் கையாதலின் முப்புரம் எரித்தது உனது வீரத்தால் நிகழ்ந்து என்று எப்படிச் சொல்லக் கூடும்? நன்று நன்று உனது சேவகம் என, எள்ளி நகையாடுவார் போல, கற்ருர் பயில்கடல் நாகைக்கா ரோணத்தெம் கண்ணுதலே விற்ருங் கியகரம் வேல்நெடுங் கண்ணி வியன்கரமேல் நற்ருள் நெடுஞ்சிலே நாண்வலித் தகரம் நின்கரமே செற்ருர் புரம்செற்ற சேவகம் என்னகொல் செப்புமினே என்று பாடியுள்ளார். தகரம் என்னும் சீரின் தகரத்தை விட்டிசைக்க. இன்றேல் வெண்டளை கெடும். குமரகுருபரர் மேருவாகிய மலை ஏன் வளைந்தது என்ப தனத் தம் கற்பனை நயம் தோன்றக் கூறவந்த இடத்தில், 49