பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/861

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுதேர்ப் பருவம் 77g ஒனறதாய் அநேக சத்தி உடையதாய் உடனய் ஆதி அன்றதாய் ஆன்மா வின் தன் அறிவொடு தொழிலே ஆர்த்து நின்றபோத் திருத்துவத்தை நிகழ்த்திச்செம்பி னில்க ளிம்புபேய்ந்து என்றும்அஞ் ஞானம் காட்டும் ஆணவம் இயைந்து நின்றே என்று சிவஞான சித்தியாரும் கூறுதல் காண்க. இப் பாசம் இருள் வடிவினதாதலின், 'வெங்கடிய ஆணவ மலக் குருட்டு இருள்' என்றனர். பாசம் இருள் என்றதஞல், பதி ஒளி உடை யது என்பது பெறப்படுகின்றதன்முே? திருவெண்ணிற்றுச் சாதனமும் மலத்தை ஒடும்படி செய்யும் என்ற குறிப்பே மூன்று வரிகளிளில் அறியப்படுவதாகும். மும்மலங்களை நீறு செய்வதனால் நீறு என்ற பெயர் பெற்றதாக 'நீறு புனே வார் வினேயை நீறு செய்வதாலே, வீறு தனி நாமமது நீறென விளம்பும்' என்று கூறப்படுதலால் அறியலாம். மேலும் வள்ளலார், துயில் ஏறிய சோர்வும்கெடும் துயரம்கெடும் நடுவன் கையிலேறிய பாசம்துனி கண்டேமுறித் திடுமால் குயிலேறிய பொழில்சூழ் திருக்குன்றே றிநடக்கும் மயிலேறிய மணியேஎன வளர்நீறணிந் திடிலே என்றும் கூறுதலால் வெண்ணிற்றுச் சாதனத்தால் மலம் இரிந்தோடும் என்பது பெற்ரும். உலகில் தாமரை மலரும்போது ஆம்பல் குவியும் என்பதை நாம் பார்க்கிருேம். தாமரை பகலில் சூரியனைக் கண்டதும் மலரும். ஆம்பல் சூரியனேக் கண்டதும் குவியும். இதுபோல ஞானசூரியனும் சேக்கிழார் பெருமாளுரைக் கண்டதும் பரசமங்களாகிய ஆம்பல்கள் குவிந்தன எனச் சேக்கிழாரது மாண்பினைக் குறித்தன்ர் ஆசிரியர்.