பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 பாயிரம் புரந்தராதி வானவர்பதம் போதுறை புத்தேள் பரந்தவான் பதம்சக்கரப் படையுடைப் பகவன் வரந்தவாது வாழ்பதம்எலாம் நிலைகெட வருநாள் உரம்தவாது நின்றுாழி தோருேங்கும் அவ்வோங்கல் என்பதையும் ஈண்டுக் கருத வேண்டும். இக் காரணங் களைக்கொண்டே இங்கு 'ஒங்கு கயிலாயம்' என்றனர். யாவர்க்கும் முதற்குரு இறைவனே ஆவான். அவனே உயிர்களின் பக்குவம் அறிந்து, ஞான சாரியனுக வந்து அருள் புரிகின்றவன். இதனை நமது சிவஞான போதம், 'ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்தென தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்த' என்றும், அங்ங்ணம் குருவாய் வந்து அருளும் முறையினை, ' மெய்ஞ்ஞானம் தானே விளையும்விஞ் ஞானகலர்க்கு அஞ்ஞான அச்சகலர்க் கக்குருவாய்-மெய்ஞ்ஞானம் பின்உணர்த்தும் அன்றிப் பிரளயா கல்லருக்கு முன்உணர்த்தும் தான் குருவாய் முன்’’ என்னும் வெண்பாவாலும் நன்கு உணரலாம். இக் கருத் துக்களை மேலும் செவ்வனே விளக்குவான் வேண்டி அருள் நந்தி சிவாசாரியார், மன்னவன் தன் மகன்வேடர் இடத்தே தங்கி வளர்ந்தவனை அறியாது மயங்கி நிற்பப் பின்னவனும் என்மகன் நீ என்றவரில் பிரித்துப் பெருமையொடும் தானுக்கிப் பேணு மாப்போல் துன்னியஐம் புலவேடர் சுழலில் பட்டுத் துணைவனையும், அறியாது துயர்உறும்தொல் மன்னும்அருட் குருவாகி வந்தவரின் நீக்கி (உயிரை மலம்அகற்றித் தானக்கி மலரடிக்கீழ் வைப்பன் என்று அருளிப் போந்தார்,