பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் சேது மன்னர்கள் இலக்கியங்கள் பல முன்பே வெளிப்பட்டுள்ளனர். அவர்கள் பெருமை கூறும் செப்பேடுகள் பலவற்றை அரிதின் முயன்று தேடித் தொகுத்து ஆய்வுக் குறிப்புக்களுடன் கலைக்களஞ்சியம் போல் வெளியிட்டு வரலாற்று உலகுக்கு அணி செய்தவர் நண்பர் ஆய்வுத் திலகம் திருமிகு முனைவர் எஸ்.எம். கமால் அவர்கள். சேது நாட்டுக்கு நண்பர் கமால் அவர்கள் ஆற்றிய ஆற்றிவரும் அறப்பரும் இலக்கிய - வரலாற்றுப் பணிகட்கு வரையறையில்லை. ஒப்பாரும் மிக்காரும் இல்லாத செயற்கரிய பணிகள் அவை, சேதுநாட்டின் புகழைச் சிகரத்தில் ஏற்றியவர் நண்பர் கமால் அவர்கள் அரும்பெரும் பணியின் தொடர்ச்சியாக சேதுபதி மன்னர் தம் கல்வெட்டுக்களை எல்லாம் ஒன்றாகத் தொகுத்து வெளியிடுகிறார்கள். இக்கல்வெட்டுக்கள் சேதுபதி மன்னர்களுடைய - அவர்தம் குடும்பத்தாருடைய கொடைச் சிறப்புக்களையும், பக்தித் திறத்தையும், அவர்களின் திருப்பணிப் பெருமைகளையும் மிக நன்கு விளக்குகின்றன. சமயப் பொறுமையும் - பெருமையும் மிக்க சேதுபதி மன்னர் வரலாற்றில் இஸ்லாமியர் புனிதத் தலங்கள் பல சிறப்புப் பெற்றன. வள்ளல் சீதக்காதியும், கவிச்சக்கரவர்த்தி ஜவ்வாதுப் புலவரும் பெற்ற சிறப்பிடத்தை வரலாற்று உலகமும், இலக்கிய உலகமும் மிக நன்கு அறியும். அவர்கள் தொடர்பு இல்லாமல் சேதுபதி மன்னர் வரலாற்றை எழுத முடியாது. சேதுபதி மன்னர் அவையில் இருவரும்பெற்ற சிறப்பு சீர்மிக்கது. சேதுபதி மன்னர்கள் இவர்களால் சிறப்புற்றனர். சேதுபதி மன்னர் அளித்த சிங்கமுகப் பல்லக்கையே நடமாடும் அரியாசனமாகக் கொண்டு பெருவாழ்வு வாழ்ந்தவர் ஜவ்வாதுப் புலவர். அவர்கள் இருவரையும் நான் நண்பர் டாக்டர் VIII