பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

HA - சேதுபதி மன்னர் ஸ்நேகவல்லி என மாறி இருப்பது காண்க. வைணவ சம்பிராதாயத்தில் பெருமாள் மூன்று கோலங்களில் காட்சி அளிப்பதாக வைணவ நூல்கள் குறிப்பிடுகின்றன. நிற்றல், இருத்தல், கிடத்தல் என்பன அந்த மூன்று நிலைகளாகும். இந்த நிலைகளில் ஏதாவது ஒன்றினை அலங்கரித்து அழகுபடுத்திச் செய்யப்படும் பூஜை அவசரம் என்று குறிப்பிடப்படுகிறது. ரகுநாத சேதுபதியின் பெயரால் ஏற்படுத்தப்பட்ட இந்த பூஜை ரகுநாத அவசரம் என்று குறிப்பிடப்படுகிறது. பலன் தரும் மரங்களுக்கு விதிக்கப்படும் தீர்வு - -והוב6וחחו குடிவாரம் - நிலத்தை உழுதுபயிரிட்ட குடிமகனுக்கு விளைச்சலில் ஒதுக்கீடு செய்யப்படும் தானிய அளவு மேல்வாரம் - விளைச்சலிலிருந்து நிலத்தின் சொந்தக்காரருக்குச் சேரவேண்டிய தானிய பங்கு பரதேசி முத்திரை - கோயில் காரியங்களைக் கவனித்து வருகின்ற பரதேசிக்குரிய அடையாளம் பரதேசி என்ற வடமொழிச் சொல்லுக்கு "துறவி" என்பது தமிழில் பொருளாகும். இந்தக் கல்வெட்டிலிருந்து அப்பொழுது திருமெய்யம் பகுதியில் பிராமணர், வேளாளர் என்ற சாதிப் பிரிவினரும், பல சுவந்திரங்களை அனுபவித்துவந்த கணக்கர் மற்றும் பலரும் கணிசமான அளவில் இருந்தனர் என்பது தெரியவருகிறது. மேலும் இந்தக் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ள மண்டபம் சுந்தரபாண்டியன் குறடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சுந்தர பாண்டிய மன்னன் கி.பி.13ஆம் நூற்றாண்டில் மிகச் சிறப்பாக விளங்கிய பேரரசன்