பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வெட்டுக்கள் இருந்ததாகக் கல்வெட்டு வாசகம் தெரிவிக்கிறது. இந்த ஊரினைச் சேர்ந்த ஆன்மீகச் செல்வரான தெய்வ கன்னியாப்பிள்ளை மகன் தெய்வராயப் பிள்ளையும், அவரது மனைவி வீராயி அம்மாளும் ஏற்கனவே சுயம்பாக இருந்த சொக்கநாதருக்கு ஒரு ஆலயமும், அம்பாளுக்கு மண்டபமும், மடமும் நந்தவனமும் அமைப்பதற்காக அந்தக் கோயிலின் பரதேசி முத்திரையான வெள்ளையத் தேவரிடம பொன்னும், பொருளும் கொடுத்தனர். அதனைக் கொண்டு அவர் சொக்கநாதருக்கு கல்லினால் ஆலயமும், அம்பாளுக்கு செங்கலினால் ஆலயமும் கட்டி மடமும் நந்தவனமும் ஏற்படுத்தினார். நயினார் கோவிலைச் சேர்ந்த நம்பிமார்களைக் கொண்டு குடமுழுக்கு நடத்திக் கோயிலுக்கு மூன்று கால பூஜையும், அன்னதானமும் நடத்திவர ஏற்பாடு செய்யப்பட்டது. திருமலை ரெகுநாத சேதுபதி, இந்தக் கோயிலில் ஒரு சன்னதியை ஏற்படுத்திக் கொடுத்தார் என்பது இந்தக் கல்வெட்டிலிருந்து தெரியவருகிறது. சேதுபதி மன்னர்கள் திருக்கோயில், அன்ன சத்திரம், திருமடம் ஆகியவைகளை அவர்களே பல ஊர்களில் ஏற்படுத்தியதுடன் அவர்களது குடிமக்கள் செய்த இத்தகைய பொது நலப் பணிகளுக்கு உறுதுணையாக இருந்து பல வழிகளிலும் உதவி வந்துள்ளனர் என்பதை அவர்களது வரலாற்றில் இருந்து அறிய முடிகிறது. இந்த மன்னர் அவரது ஆட்சிக் காலத்தில் திருப்புல்லானி ஜெகநாதப் பெருமாள் ஆலயத்தை முழுமையாக அமைத்துக் கொடுத்ததுடன், பார்த்திபனுரை அடுத்த பிடாரிசேரி அன்ன சத்திரத்தைத் தமது பொறுப்பில் எடுத்துக்கொண்டு, அந்த சத்திரத்திற்கு பராமரிப்பதற்கு சிறிய ஊர்களையும் த்ானமாக வழங்கியுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இதனைப்போன்றே இராமேஸ்வரத்தில் உள்ள நாவிதர்களுக்குக் கொண்டேஸ்வரர், திருமடத்தையும், அமைத்துக் கொடுத்தார் என்பதையும் இராமநாதபுரம் சமஸ்தான ஆவணங்கள் தெரிவிக்கின்றன.