பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வெட்டுக்கள் = =- - –– எஸ்.எம்.கமால் அவர்கள் வடிவில காணுகிறேன். இது உண்மை வெறும் புகழ்ச்சியில்லை. சேதுபதி மன்னர்தம் கல்வெட்டுக்களை ஒவ்வொன்றாக அவர்கள் அரிதின் முயன்று தொகுத்ததையும், பிழையின்றித் திருத்தமுற அவற்றை வெளிக்கொணர எடுத்த பெரும் முயற்சிகளையும் நான் நன்கு அறிவேன். நண்பரவர்கள் எழுதியுள்ள ஆய்வுக் குறிப்புக்கள் அவர்தம் பட்டறிவையும், சேதுநாட்டின் - சேதுபதி மன்னர்கள் வரலாற்றில் அவர்கள் பெற்றுள்ள பழுத்த அனுபவத்தையும் தெளிவாகக் காட்டுகிறது. - இஸ்லாமிய இலக்கியம்-வரலாற்றையும், சேதுநாட்டின் ஆவணங்களையும் வரலாற்றையும் இரு கண்களாகக் கொண்டு வாழும் நண்பர் டாக்டர் எஸ்.எம். கமால் அவர்கள் முயற்சிகளை மனமாரப் போற்றி மகிழ்கின்றேன். இடம் : கொங்கு ஆய்வு மையம், அன்புள்ள ஈரோடு -11 كيَا IX