பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105 கல்வெட்டுக்கள் - - திருமலை ரகுநாத சேதுபதியைத் தான் குறிப்பிடுகிறது என்பது உறுதியாகிறது. முன்னாள் தமிழ்நாடு அரசு தொல்பொருள் துறை இயக்குநர்திரு. ஆர்.நாகசாமி அவர்கள் வரைந்துள்ள 'கட்டுரை ஒன்றில் இந்த மறவணி ஏந்தல் கிராமம் வேறு ஏழு கிராமங்களுடன் சேர்த்து சேதுபதி மன்னர் மல்லை அழகிய சிற்றம்பல கவிராயர் என்ற புலவருக்குத் தானம் வழங்கினார் என்றும், அதனை அந்தப் புலவர் பின்னர் தில்லை நடராசப் பெருமாளுக்குத் தானமாக வழங்கிவிட்டாா என்றும் குறிப்பிட்டுள்ளார். 1. தென்னன் விசைய ரெகுநாதச் சேதுபதி மன்னன் கனகசபை வாணருக்கு - நன்னிலமேல் இந்துமதி யுள்ளளவு மேநடக்கக் கற்போட்டுத் தந்தான் மறவணி ஏந்தல். 2. பூதான மாக மறவணியேந்தலைப் போதுமடை மீதான அம்பல வாணர்தம் பூசை விளங்கச் செய்தோர் ஏதாகி லுந்தடை வந்தாலும் . . . . திறல் வாழுங்குரு மாதாபி தாப்பசுவை . . . . . . o புலவர் அழகிய சிற்றம்பலக் கவிராயர் திருமலை சேதுபதி மன்னரைப் பற்றிப் புகழ்ந்து தனசிங்கமாலை என்ற நூலைப்பாடியதற்குப் பரிசாக அவர் வாழ்ந்து வந்த மிதிலைப்பட்டி ஊரினைச் சேதுபதி மன்னரிடமிருந்து தானமாக பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது வீட்டில் இருந்துதான் பின்னர் சீவகசிந்தாமணி போன்ற சங்க இலக்கிய ஏடுகளை டாக்டர் உ.வே. சுவாமி நாத ஐயர் அவர்கள் தேடி எடுத்தார் என்பதும் நினைவில் கொள்ளத்தக்கது. 1. Nagasamy R.Dr.-South Indian studies- "Part II"- (1985) - Page 2. Imam Fair Register- Volume * புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு