பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- - சேதுபதி மன்னர் இ_2 | இராமேஸ்வரம் திருக்கோயில் கல்வெட்டு இந்தக் கல்வெட்டினை வெட்டுவித்தவர் முத்து விஜய ரெகுநாத சேதுபதி ஆவார். இந்த மன்னரின் இயற்பெயர் திருஉடையாத்தேவர் என்பதாகும். இவர் திரு உத்தரகோசமங்கை கதம்பத் தேவரது மகனாவார். ரெகுநாத கிழவன் சேதுபதி கி.பி.1710இல் காலமான போது இராமநாதபுரம் அரண்மனையைச் சார்ந்த மன்னரது உறவினர்கள் சேதுபதி பட்டத்துக்கு உரியவராக இவரைத் தேர்வு செய்தனர். இவர் கி.பி.1710ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற மகள் நோன்பு விழாவின்போது (விஜயதசமி விழா) பட்டம் சூடிக் கொண்டதால் இவரது பெயர் முத்து விஜய ரகுநாத சேதுபதி என வழங்கப்பட்டது. இந்தச் செய்தி தவறானது என்பதை காட்டுகின்ற கி.பி.1710லும், 1. Raja Ram Rao.T. - Manual of Ramnad Samasthanam (1891)