பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

121 கல்வெட்டுக்கள் - - மாவட்டம் அகத்தீஸ்வரம், தஞ்சை மாவட்டம் அகத்தியன் பள்ளி, இராமநாதபுரம் மாவட்டம் அகத்தியர் குட்டம், ஆகிய மூன்று ஊர்கள் வழங்கப்பட்டு வருவது இங்கு குறிப்பிடத்தக்கது. கொங்குநாட்டில் ஈரோடு மாவட்டம் காங்கயம் நகரில் அகிலாண்டபுரம் பகுதியில் உள்ள சிவாலயத்திற்கு அகத்தீசுவரம் என்று ஈரோடு வட்டம் சாவடிப்பாளையம் புதுர் அருகில் காவிரியாற்றின் நடுவில் உள்ள சிவாலயத்திற்கு நட்டாந்து அகத்தீசுவரர் என்றும் பெயர் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. கள்ளர் சீமையின் வடபகுதி முழுவதும் கிழவன் ரகுநாத சேதுபதி காலத்தில் அவரது மைத்துனர் (மனைவியின் சகோதரன்) ரகுநாதராய தொண்டைமானால் ஆக்கிரமிக்கப்பட்டு சிறிய தன்னரசாக இயங்கி வந்த பொழுதும், கள்ளர் சீமையின் தென்பகுதி வெள்ளாற்றிற்கு தெற்கே தொடர்ந்து இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களது ஆளுகையில் இருந்து வந்தது என்பதற்கு இது ஒரு சிறந்த வரலாற்றுச் சான்று ஆகும். தாஞ்சூர் அகத்தீசுவரருக்கு சேதுபதி மன்னர் வழங்கிய நிலக்கொடைகள் பற்றிய கல்வெட்டு இது. இந்தக் கல்வெட்டு வாசகம் பின்வருமாறு: 1. சுபமஸ்து சகாப்த்தம் 1640க்கு மேல் செல்லாநின்ற பிரசோறபதி 2. அற்பசி மீ 7 உ சேது ஆதீனமான முத்து விசைய ரகுநாத சேதுபதி காத்த 3. தேவரவர்கள் தாஞ்சூர் அகத்திசுவரமுடையாருக்கு பூசைப் பத்தாக கட் o 4. டளையிட்டது மேலுவயலும் குளமும் பெருனாங்கெல்லையும் புஞ்சையில் பெரியப் பிஞ்ை 5. ச கொட்டைப்பாக்கன் பிஞ்சைகாஞ்சிராவடி பிஞ்சை