பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வெட்டுக்கள்= – l இயல் 25 | நயினார் கோயில் திருக்கோயில் கல்வெட்டு இந்தக் கல்வெட்டினை வெட்டுவித்தவர் ரகுநாத கிழவன் சேதுபதியின் மகன் பவானி சங்கரத் தேவர் ஆவார். இந்த மன்னரது ஆட்சியைப் பற்றிய செய்திகளை இதுவரை வரையப்பட்ட சேது மன்னர்களது நூல்களில் காணப்படவில்லை. இந்த மன்னர் ரகுநாத கிழவன் சேதுபதியின் மைந்தன் ஆவார். கிழவன் சேதுபதியின் முதல் மனைவிக்குப் பிறந்த ஒரே மகன் ரணசிங்கத் தேவர் அகால மரணமடைந்துவிட்டதால் சேதுபதி பட்டத்துக்கு உரியவராக பவானி சங்கரத் தேவர் உரிமை பெற்று இருந்தாலும், அவரை இராமநாதபுரம் அரண்மனையைச் சார்ந்த முதியவர்கள் மன்னராக தேர்வு செய்யவில்லை. காரணம் பவானி சங்கரத் தேவர் இராமநாதபுரம அரண்மனை மரபுப்படி மன்னரது மனைவியும்,