பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.25 கல்வெட்டுக்கள் -- - போற்றப்படும் திருக்கோயில் இது. ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதத்தில் இங்கு நடைபெறும் வசந்த விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் சுவாமியைத் தரிசனம் செய்வதுடன் அந்த ஆண்டின் அறுவடையில் கிடைத்த தானியங்களைத் தங்களது காணிக்கையாகச் சுவாமிக்குச் செலுத்தி வருகின்றனர். இந்தத் திருக்கோயிலின் அர்ச்சனைக்கு நயினார் கோவில் வட்டாரத்தில் உள்ள அண்டக்குடி கிராமத்தின் நஞ்சை புஞ்சை நிலங்களை மன்னர் பவானி சங்கரத் தேவர் தானம் வழங்கியதை இந்தக் கல்வெட்டு தெரிவிக்கின்றது. இந்தக் கல்வெட்டின் இறுதியில் சிதைவுகள் ஏற்பட்டு இருப்பதால், கல்வெட்டின் காலத்தையும், பிற செய்திகளையும் தெரிந்து கொள்ள முடியவில்லை. இந்தக் கல்வெட்டின் வாசகம் பின்வருமாறு: 1. சுபமஸ்து பூரீநயினார்க்கு அர்ச்சனை 2. க்கு அண்டகுடியில் தஞ்சை புஞ்சை காணிகளை சர் 3. வ மாதியமாக தானம் பண்ணினேன். 4. (குருக்களிடம்) இடத்தில் பவானி சங்கரன்” இந்த தானத்தைச் சேதுபதி மன்னர் அந்தக் கோயிலின் பிரதான குருக்களிடம் வழங்கினார் என்ற செய்தி மட்டும் இந்தக் கல்வெட்டிலிருந்து தெரிய வருகிறது.

  • புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு