பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12; --- சேதுபதி மன்னர் l இயல் 26 | பெருவயல் திருக்கோயில் கல்வெட்டு பவானி சங்கர சேதுபதியினால் போரில் கொல்லப்பட்ட சுந்தரேச சேதுபதியின் சகோதரர் கட்டையத் தேவரும், முத்து விஜய ரகுநாத சேதுபதியின் மருகர் சசிவர்ணத் தேவரும், தஞ்சை மன்னரது உதவியுடன் பவானி சங்கரத் தேவரை கி.பி.1728-ல் ஓரியூர் கோட்டைச் சண்டையில் தோற்கடித்தனர். இதனால் அப்பொழுதிலிருந்த இராமநாதபுரம் தன்னரசை சசிவர்ணத் தேவரும், கட்டையத் தேவரும் இரண்டு சீமைகளாகப் பிரித்து இருவரும் தனித்தனியாக மன்னராகினர். இந்த கட்டையத் தேவர் தான் குமார முத்து விஜய ரகுநாத சேதுபதி என்ற பெயருடன் கி.பி.1728ல் இராமநாதபுரம் சேதுபதி ஆனார். இவரது ஆட்சிக் காலம் மிகக் குறுகியதாக இருந்த பொழுதினும் பல அறப்பணிகளுக்கு உரியதாக அமைந்த ஊர்களைப் பற்றி அவர் வழங்கிய செப்பேடுகளும், கல்வெட்டுக்களும்