பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127 கல்வெட்டுக்கள் - - தெரிவிக்கின்றன. இந்த மன்னரது இரு கல்வெட்டுக்கள் இப்பொழுது கிடைத்துள்ளன. முதலாவது பெருவயல் ரணபலி சிவசுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு வழங்கிய நில மான்யங்களை குறிப்பது ஆகும். இராமநாதபுரம் கோட்டைக்கு வடக்கே எட்டுக் கல் தொலைவில் உள்ள பெருவயல் கிராமத்தில் இந்த மன்னரது தளவாய் வையிரவன் சேர்வைக்காரர் என்பவர் எடுப்பித்த திருக்கோயிலுக்கு வழங்கப்பட்ட நிலக்கொடைகளைக் குறிக்கும் கல்வெட்டு அது அந்தக் கோயிலின் வடக்குப் பகுதியில் சக்கரவாள நல்லூர் புரவில் இந்தக் கல்வெட்டு அமைக்கப்பட்டது. ஆனால் தற்பொழுது இந்தக்கல்வெட்டு அங்கே காணப்படவில்லை. ஏற்கனவே படி எடுக்கப்பட்டு இந்தக் கோயிலின்பரம்பரை விசாரணை தாரரான எஸ்.சண்முகசுந்தரம்பிள்ளை அவர்களது 1954ஆம் ஆண்டு பிரசுரத்தில் காணப்படுகிறது. அந்தக் கல்வெட்டுப் படியினைக் கீழே காணலாம். இந்தக் கோயிலை மிகுந்த பக்தியுடன் தனிப்பட்ட மனிதரான தளவாய்வையிரவன் சேர்வைக்காரர் கட்டிமுடித்திருப்பதால் இந்தக் கோயிலின் அன்றாட பூஜை, திருவிளக்கு. திருமாலை ஆகிய கைங்கரியங்கள் செவ்வனே, நடப்பதற்கு கி.பி.1736-ல் இந்த மன்னர் பெருவயல்கலையனூர் கிராமத்தை நிலக்கொடைகளாக வழங்கியதை இந்தக் கல்வெட்டு குறிப்பிடுகின்றது. சேதுபதி மன்னர் இந்தத் திருக்கோயிலுக்கு வழங்கிய நிலக்கொடையை முன் மாதிரியாகக் கொண்டு அறந்தாங்கித் தொண்ட்மானும், சிவகங்கை மன்னரும், மதுரை நாயக்க மன்னரும் அவர்களது பகுதியில் உள்ள சில கிராமங்களை சர்வமான்யமாக வழங்கியிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தத் திருக்கோயில் மீது பக்தியும், பற்றும் கொண்ட இராமநாதபுரம் பேட்டை வணிகர்கள் கி.பி.1741-ல் பூஜை முதலியவைகளுக்கே மகமை ஒன்றினை ஏற்படுத்தி அதன் வழி இராமநாதபுரத்தில் விற்பனையாகும் பஞ்சு, பாக்கு. மிளகு, செம்பு ஆகிய பொருள்கள் விற்பனையிலிருந்து இந்த மகமைத் தொகையை அளிக்க ஒப்புதல் பட்டையம் ஒன்றும்