பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 சேதுபதி மன்னர் தோஷத்திலே போவாறாகவும், 45. இந்த சிலா சாலன லிகிதம் த. திருவேங்கிடமாசாரி புத்திரன் 46. விசுவமூர்த்தி ஆசாரி" இதுவரை கிடைக்கப் பெற்ற சேதுபதி மன்னர்களது கல்வெட்டுக்களில் மிகவும் நீண்ட சொற்றொடர்களை (46 வரிகளை) கொண்டதாக இந்தக் கல்வெட்டு அமைந்துள்ளது. மேலும் இந்த மன்னரது காலத்தில் ஏற்கனவே வழங்கப்பட்ட பல செப்பேடுகளில் குறிப்பிட்டு இருப்பது போல சேது மன்னரைப் பற்றிய பலவித விருதாவனிகள் (மொத்தம் 35) இந்தக் கல்வெட்டிலும் காணப்படுவது புதுமையாக உள்ளது. இந்த மன்னரது காலத்தில் சேதுநாட்டில் கல்வெட்டுக்களைப் பொறிக்கும் பணியில் ஈடுபட்ட கல்தச்சர்கள் இல்லை என்பதையே இந்தக் கல்வெட்டு வாசக அமைப்பிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. மேலும் இந்தக் கோயில் அமைந்துள்ள கிராமத்தின் பெயர் பெருவயல் கலையனுர் என கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று இந்த ஊர் பெருவயல் என்று மட்டுமே வழங்கப்பட்டுவருகிறது. இந்த நிலக்கொடைக்கு பெரு நான்கு எல்கைளாக குறிப்பிடப்பட்டுள்ள புல்லங்குடி ஆறு. சிறுவயல் கல்லறை, நாரணமங்கலம், சக்கரவாளநல்லூர் ஆகிய கிராமங்கள் இன்றும் அப்படியே வழக்கில் உள்ளன. -

  • புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு