பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வெட்டுக்கள் 133 U2Trö27] களுவன்குடி கல்வெட்டு இராமநாத குமார முத்து விஜய ரகுநாத சேதுபதி மன்னரது ஆட்சிக் காலத்தில் பொறிக்கப்பட்ட இன்னொரு கல்வெட்டு இது. தேவகோடடைக்கு நேர் கிழக்கே 18 கல் தொலைவில் உள்ள கண்ணங்குடி ஊரை அடுதத களுவன்குடி கண்மாய்க் கரையில் நாட்டப்பட்டுள்ளது. இந்த ஊர் இப்பொழுது உலக வழக்கில் களவன்குடி என்று வழங்கப்படுகிறது. ஆனால் இந்த ஊரின் சரியான பெயர் குளுவன்குடி என்பதே ஆகும். ஒரு காலத்தில் பலவிதமான பறவைகளை வலை வைத்துப் பிடித்து விற்பனை செய்யும் நாடோடிக் கூட்டத்தினர் குளுவன் என அழைக்கப்பட்டனர். இதே பெயரில் இன்றும் இராமநாதபுரம் திருச்சி நெடுஞ்சாலையில் சோழந்துர் கிராமத்திற்கு சற்றுத் தென் மேற்கே குளுவன்குடி என்ற பெயரிலேயே மற்றொரு கிராமம் இருந்து வருகிறது. மேலும் "நகரத்தார் குளுவன் நாடகம்" என்ற பெயரில் ஒரு நாடோடி இலக்கியம் இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. கல்லின்