பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

141 கல்வெட்டுக்கள்= - - T "ஜீரநோத்தாரணம்" (கி.பி.1784) செய்த விவரத்தை அங்குள்ள இந்த கல்வெட்டுச் செய்தி தெரிவிக்கின்றது. கர்ப்பக்கிரகம், அர்த்த மண்டபம் ஆகியவைகளை மன்னர் அவர்கள் கட்டளையிட்டபடி அவரது பிரதானி முத்து இருளப்ப பிள்ளை அவர்கள் நேரில் இருந்து செய்ததற்கு முகூர்த்தம் செய்து இந்த வேலைகளுடன் மேல் கருங்கல் விமானமும் கட்டுவித்துசுவாமியை 45 நாட்கள் பாலாலயத்தில் எழுந்தருளச் செய்து அபஷேகம், நெய்வேத்தியம், ஹோமம், பிராமண போஜனம் செய்வித்தார் என்றும் அதே ஆண்டு மாசி மாசத்தில் சுவாமியைப் பிரதிட்டை செய்து கோயிலுக்குக் குடமுழுக்குச் செய்தார் என்றும் இந்தக் கல்வெட்டின் மூலம் தெரியவருகிறது. கருவறையின் தென்சுவரில் இந்தக் கலவெட்டு இடம்பெற்றுள்ளது. இந்தக் கல்வெட்டு வாசகம் பின்வருமாறு: 1. உ. . . . . . . துரீசனலிவாகன சகாப்தம் 1706 2. வருசம் 4885 இதன் மேல் செல்லாதி 3. ன்ற குரோதிஹ சம்வத்சரத்தில் 4. மகர மாசத்தில் கிருஷ் ணபட்சத்து 5. தசமியும் புரணர்வாலமும் அங்காரக நட்ச 6. த்திரமும் நாம யோகமும் பவகரணமும் 7. கூடின சுபதினத்தில் ராஜவேளையில் கும் 8. பல்லக்கிநத்தில் மருதவனத்துககுப் பிரதி நாமம 9. சனநயினார் கோவில் நாகநாத சுவாமிக்கு கர்ப்ப 10. கிரகம் அர்த்த மண்டபம் சிருணாத்தாரண 11. ம் செய்குறதற்கு ராசமானிய மகாராச ராசபுரீ